பக்கவாத்தியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பக்க வாத்தியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு இசை நிகழ்ச்சியில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள், பக்கவாத்தியம் என்றழைக்கப்படும்.
கருநாடக இசையில் பக்கவாத்தியம் [தொகு]
பாடலுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம், வயலின், கஞ்சிரா, கடம், மோர்சிங் போன்றவை வாசிக்கப்படுகின்றன. கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் பாடகருக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.
| குழு எண் | குழு அமைப்பு |
|---|---|
| 1 | பாடகர், மிருதங்கம், வயலின் |
| 2 | பாடகர், மிருதங்கம், வயலின், கஞ்சிரா |
| 3 | பாடகர், மிருதங்கம், வயலின், கடம் |
| 4 | பாடகர், மிருதங்கம், வயலின், மோர்சிங் |
வாத்திய தனி இசைக்கு, வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவியைப் பொருத்து பக்கவாத்தியங்கள் தெரிவு செய்யப்படும். கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.
| முக்கிய இசைக்கருவி | பக்கவாத்தியங்கள் |
|---|---|
| வயலின் | மிருதங்கம், கடம் |
| வயலின் | மிருதங்கம், கஞ்சிரா |
| புல்லாங்குழல் | மிருதங்கம், கடம் |
| புல்லாங்குழல் | மிருதங்கம், கஞ்சிரா |
| மேண்டலின் | மிருதங்கம், வயலின், கடம் |
| சாக்சபோன் | வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங் |
| வீணை | மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் |