கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதியதாக உருவாகியுள்ள தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி ஆகும்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி).

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]

29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஆதி சங்கர் பாமகவின் கே. தனராசை 108,608 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார். இங்கு போட்டியிட்ட நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமாகிய விஜய டி இராஜேந்தர் 8,211 வாக்குகள் பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆதி சங்கர் திமுக 363,601
கே. தனராசு பாமக 254,993
கே. எல். சுதீஸ் தேமுதிக 132,223
எசு. இரமேசு கொமுபே 17,818
அருண் கென்னடி சுயேச்சை 13,216
விஜய டி இராஜேந்தர் சுயேச்சை 8,211