செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதுவரை அதிமுக 5 முறை செங்கல்பட்டு தொகுதியில் வென்றுள்ளது. திமுக, காங்கிரசு தலா 3 முறையும், பாமக இரு முறையும் இங்கு வென்றுள்ளன. இரு முறை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்[1][தொகு]

1.திருப்போரூர்

2.அச்சரப்பாக்கம்

3.செங்கல்பட்டு

4.காஞ்சிபுரம்

5.உத்திரமேரூர்

6.மதுராந்தகம்

இங்கு வென்றவர்கள்[தொகு]

  • 1951 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
  • 1957 - என்.சிவராஜ் - சுயேச்சை.
  • 1957 - ஏ.கிருஷ்ணசாமி - சுயேச்சை.
  • 1962 - ஓ.வி.அழகேசன் - காங்கிரசு.
  • 1967 - சி.சிட்டிபாபு - திமுக.
  • 1971 - சி.சிட்டிபாபு - திமுக.
  • 1977 - ஆர்.மோகன ரங்கம் (அதிமுக)
  • 1980 - அன்பரசு - காங்கிரசு.
  • 1984 - ஜெகத்ரட்சகன் - அதிமுக.
  • 1989 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
  • 1991 - எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் - அதிமுக.
  • 1996 - கே.பரசுராமன் - திமுக.
  • 1998 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
  • 1999 - அ.கி. மூர்த்தி - பாமக.
  • 2004 - அ.கி. மூர்த்தி - பாமக.

2004 தேர்தல் முடிவு[தொகு]

பொதுத் தேர்தல், 2004: செங்கல்பட்டு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக ஏ.கே.மூர்த்தி 431,643 56.85 +9.62
அஇஅதிமுக K.N.ராமச்சந்திரன் 282,919 37.26 -8.13
ஜனதா கட்சி குமரேசன் 10,956 1.44 n/a
பசக நாகமணி 8,659 1.14 n/a
வாக்கு வித்தியாசம் 148,724 19.59 +17.76
பதிவான வாக்குகள் 759,246 65.02 +6.69
பாமக கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.