விருதுநகர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகியவை மதுரை மாவட்டத்தில் உள்ளவை. மற்ற நான்கும் விருதுநகர் மாவட்டத் தொகுதிகள்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் மாணிக்கம் தாகூர் மதிமுகவின் வைகோவை 15,764 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து விருதுநகர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மாணிக்கம் தாகூர் காங்கிரசு 3,07,187
வைகோ மதிமுக 2,91,423
கே. பாண்டியராஜன் தேமுதிக 1,25,229
மு. கார்த்திக் பாரதிய ஜனதா கட்சி 17,336
வி. கனகராஜ் பகுஜன் சமாஜ் கட்சி 8,198

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி கூட்டணி

வெளியிணைப்புகள்[தொகு]