சிவகங்கை மக்களவைத் தொகுதி
சிவகங்கை மக்களவைத் தொகுதி லோக்சபா தொகுதிகள் வரிசையில் 31வதாக வருகிறது. தொகுதி மறு சீரமைப்பின் கீழ் சிவகங்கை தொகுதியும் மாற்றத்திற்குள்ளாகியுள்ளது.
பொருளடக்கம் |
தொகுதி மறு சீரமைப்பு [தொகு]
முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தற்போது தொகுதி மறு சீரமைப்பின்படி, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் திருமயம், ஆலங்குடி ஆகியவை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை.
மக்களை உறுப்பினர்கள் [தொகு]
இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
- 1967-71 - தா. கிருட்டிணன் - திமுக.
- 1971-77 - தா. கிருட்டிணன் - திமுக.
- 1977-80 - பெரியசாமி தியாகராஜன் - அதிமுக.
- 1980-84 - ஆர். வி. சுவாமிநாதன் - காங்.
- 1984-89 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 1989-91 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 1991-96 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 1996-98 - ப. சிதம்பரம் - தமாகா.
- 1998-99 - ப. சிதம்பரம் - தமாகா.
- 1999-04 - சுதர்சன நாச்சியப்பன் - காங்கிரசு
- 2004-09 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 2009 - ப. சிதம்பரம் - காங்கிரசு
14வது மக்களவை தேர்தல் முடிவு [தொகு]
ப. சிதம்பரம் - காங்கிரசு - 4,00,393
கருப்பையா - அதிமுக - 2,37,668
வெற்றி வேறுபாடு - 1,62,725 வாக்குகள்
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]
20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் ப. சிதம்பரம் அதிமுகவின் இராஜ கண்ணப்பனை 3,354 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| ப. சிதம்பரம் | காங்கிரசு | 334,348 |
| இராஜ கண்ணப்பன் | அதிமுக | 330,994 |
| பர்வத ரஜினா பாப்பா | தேமுதிக | 60,054 |
| எம்.ஜி. தேவர் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,600 |
| தூத்தை செல்வம் | சுயேச்சை | 6,997 |
| மலைராஜ். பி | சுயேச்சை | 6,481 |
|
|||||