கடலூர் மக்களவைத் தொகுதி
தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளி்ல் ஒன்றான கடலூர் மக்களவை தொகுதியில், சீரமைப்பிற்கு பல சட்டசபைத் தொகுதிகள் மாறியுள்ளன.
தொகுதி மறு சீரமைப்பு [தொகு]
சீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவை தொகுதியில் இருந்தன.தற்போது திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் உள்ளன. நெய்வேலி, திட்டக்குடி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட மன்ற தொகுதிகள் ஆகும்.
மக்களை உறுப்பினர்கள் [தொகு]
இங்கு முதன் முதலில் 1951ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு இங்கு ஒரு முறையும், திமுகவுக்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
- 1951 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
- 1957 - முத்துக்குமாரசாமி நாயுடு (சுயேச்சை)
- 1962 - ராமபத்ர நாயுடு (திமுக)
- 1967 - வி.கே.கவுண்டர் (திமுக)
- 1971 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
- 1977 - பூவராகன் (காங்கிரஸ்)
- 1980 - முத்துக்குமரன் (காங்கிரசு)
- 1984 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு)
- 1989 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு)
- 1991 - கலியபெருமாள் (காங்கிரசு)
- 1996 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (தமாகா)
- 1998 - எம்.சி. தாமோதரன் (அதிமுக)
- 1999 - ஆதி சங்கர் (திமுக)
- 2004 - கே. வெங்கடபதி (திமுக)
- 2009 - எசு. அழகிரி (காங்கிரசு)
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]
11 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எசு. அழகிரி அதிமுகவின் எம். சி. சம்பத்தை 23,532 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| எசு. அழகிரி | காங்கிரசு | 320,473 |
| எம். சி. சம்பத் | அதிமுக | 296,941 |
| எம். சி. தாமோதரன் | தேமுதிக | 93,172 |
| சி. ஆரோக்கியதாசு | பகுஜன் சமாஜ் கட்சி | 8,269 |
|
|||||