நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி 1957-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்த தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது. பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது.
தொகுதி மறு சீரமைப்பு[தொகு]
நாகை பாரளுமன்ற தொகுதியில் இதுவரை நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி(தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மக்களை உறுப்பினர்கள்[தொகு]
நாகை பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
- 1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரசு
- 1962 - கோபால்சாமி - காங்கிரசு
- 1967 - சாம்பசிவம் - காங்கிரசு
- 1971 - காத்தமுத்து - சிபிஐ
- 1977 - எசு.ஜி. முருகையன் - சிபிஐ
- 1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக
- 1984 - மகாலிங்கம் - அதிமுக
- 1989 - செல்வராசு - சிபிஐ
- 1991 - பத்மா - காங்கிரசு
- 1996 - செல்வராசு - சிபிஐ
- 1998 - செல்வராசு - சிபிஐ
- 1999 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக
- 2004 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக
- 2009 - ஏ.கே.எசு. விஜயன் - திமுக
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
7 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஏ.கே.எசு. விஜயன் இந்திய பொதுவுடமைக் கட்சியின் எம். செல்வராசை 47,962 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| ஏ.கே.எசு. விஜயன் | திமுக | 369,915 |
| எம். செல்வராசு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 321,953 |
| எம். முத்துக்குமார் | தேமுதிக | 51,376 |
| ஜி. வீரமுத்து | பகுஜன் சமாஜ் கட்சி | 5,123 |
| பி. வீராசாமி | சுயேச்சை | 8,769 |
|
|||||