கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு விட்டது.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஹெலன் டேவிட்சன் பாரதிய ஜனதா கட்சியின் பொன். இராதாகிருஷ்ணனை 65,687 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஹெலன் டேவிட்சன் திமுக 320,161
பொன். இராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி 254,474
பெல்லார்மின் சிபிஎம் 85,583
ஆஸ்டின் தேமுதிக 68,472
சிவகாமி பகுஜன் சமாஜ் கட்சி 6,400