கல்லடி (மட்டக்களப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்லடி
கல்லடி கடற்கரை
கல்லடி கடற்கரை
கல்லடி is located in Sri Lanka
கல்லடி
அமைவு: 7°42′0″N 81°42′32″E / 7.7, 81.70889
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு
மாவட்டம் மட்டக்களப்பு
பிசெ பிரிவு மண்முனை வடக்கு

கல்லடி (Kallady) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இலங்கையின் மிகவும் நீளமான ஒல்லாந்தர் காலத்துப் புகழ் பெற்ற பாலம் இங்கு காணப்படுகின்றது. 2004 ஆழிப்பேரலையின் போது இப்பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் தற்போது புதிதாக ஒரு பாலம் சுனாமி நிவாரண நிதியின் மூலம் புனரமைக்கப்படுகின்றது[1][2]. சுவாமி விபுலாநந்தரின் சமாதியும் இங்கு உள்ளது.

கல்லடியின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் ஓரமாக இலங்கையின் பிரசித்தி பெற்ற ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் காணப்படுகின்றது. புகழ்பெற்ற சிவானந்தா வித்தியாலயம், இராமகிருட்டிண மிசன் ஆகியவை இப்பிரதேசத்தின் பெருமைக்குரிய சொத்துக்கள் ஆகும். அத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பிரதான அலுவலகம், இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயம், கட்டிடங்கள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் இங்கு காணப்படுகின்றன.

கல்லடியின் கடற்கரை மட்டக்களப்பு மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் முதன்மை பெறுகின்றது.

[தொகு] கல்லடி காட்சியகம்

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

அமைவிடம்: 7°42′42″N 81°42′32″E / 7.71167, 81.70889

"http://ta.wikipedia.org/w/index.php?title=கல்லடி_(மட்டக்களப்பு)&oldid=985433" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்