நுவரெலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நுவரெலியா
நுவரெலியாவின் ஒரு தோற்றம்.
நுவரெலியா நகரைச் சூழவுள்ள தேயிலைத் தோட்டங்கள்
Gislanka locator.svg
Red pog.svg
நுவரெலியா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6.966° N 80.766° E
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1990 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)


நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.


[தொகு] பெயரின் தோற்றம்

சிங்கள மொழியில் நுவர என்பது நகரம் என்பதையும், எலிய என்பது வெட்ட வெளி அல்லது ஒளியைக் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.

[தொகு] சுற்றுலாத்துறை

பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் குடியேற்றவாதக் கட்டிடக்கலைப் பாணியிலமைந்த கட்டிடங்கள் மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆள்கூறுகள்: 6°58′N, 80°46′E

"http://ta.wikipedia.org/w/index.php?title=நுவரெலியா&oldid=966941" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்