இரத்மலானை விமான நிலையம்
| இரத்மலானை விமான நிலையம் | |||
|---|---|---|---|
| விமான நிலையத்தை அண்மித்த தொழிற்சாலை வாசதிகள் | |||
| IATA: RML – ICAO: VCCC | |||
| சுருக்கமான விபரம் | |||
| வானூர்தி நிலைய வகை | பொது/வர்த்தக/இராணுவ | ||
| இயக்குனர் | விமான மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) | ||
| அமைவிடம் | கொழும்பு | ||
| மையம் |
|
||
| உயரம் AMSL | 16 ft / 5 m | ||
| ஆள்கூறுகள் | அமைவு: | ||
| ஓடுபாதைகள் | |||
| திசை | நீளம் | மேற்பரப்பு | |
| ft | m | ||
| 4/22 | 6 | 2 | சரளைக்கல் |
இரத்மலானை விமான நிலையம் (Ratmalana Airport) இலங்கையின் உள்ளூர் விமானசேவைகளுக்காகவும் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படும் ஒரு விமான நிலையம் ஆகும். இது முன்னர் இலங்கையின் ஒரேயொரு பன்னாட்டு விமான நிலையமாக இருந்தது. இவ்விமான நிலையம் இலங்கையின் தலைநகார் கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைந்திருக்கிறது.
1934-ம் ஆண்டில் அன்றையை இலங்கையின் அரசியல் நிர்ணய சபை இரத்மலானையில் விமான நிலையம் கட்டுவதற்கு முடிவெடுத்தது. நவம்பர் 27, 1935ம் ஆண்டு முதலாவது விமானம் மதராசில் இங்கு இருந்து வந்திறங்கியது.
இரண்டாம் உலகப் போரின் போது இது பிரித்தானியாவின் ரோயல் வான்படையினரின் தளமாகப் பயன்பட்டது. ஜப்பானிய விமானங்களுக்கெதிரானா பல தாக்குதல்களுக்கு இவ்விமான நிலையம் பயன்பட்டது. மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்தில் இருந்து இடைத்தங்கல் இல்லாமல் விமானங்கள் இங்கு வந்து போயின. போரின் பின்னரும் பேர்த்தில் இருந்தான பயணம் நடைபெற்று வந்தது.
இதன் ஓடுபாதை 1833 மீட்டர் நீளமானது.