வீரேந்தர் சேவாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியா கொடி
வீரேந்தர் சேவாக்
இந்தியா (IND)
வீரேந்தர் சேவாக்
துடுப்பாட்ட வகை வலதுகை
பந்துவீச்சு வகை வலதுகை வலச்சுழல்
அணியில் பணி மட்டையாளர்
தேர்வு ஒ.ப.து
ஆட்டங்கள் 87 236
ஓட்டங்கள் 7694 7760
ஓட்ட சராசரி 53.43 35.11
100கள்/50கள் 22/27 14/37
அதிக ஓட்டங்கள் 319 219
பந்துவீச்சுகள் 3249 4230
இலக்குகள் (விக்கெட்டுகள்) 39 92
பந்துவீச்சு சராசரி 42.12 40.39
ஆட்டத்தில்
5 இலக்குகள்
1 0
ஆட்டத்தில்
10 இலக்குகள்
0 பொருந்தாது
சிறந்த பந்துவீச்சு 5/118 4/6
பிடிகள்/
ஸ்டம்பிங்குகள்
67/0 87/0
ஏப்ரல் 06, 2011 நிலவரப்படி
ஆதாரம்: Cricinfo.com
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

வீரு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக் (பி. அக்டோபர் 20, 1978) இந்தியாவின் துடுப்பாளர். வலதுகைத் துடுப்பாளரான இவர் இந்திய அணியின் துவக்கத் துடுப்பாளராகக் களமிறங்குபவர். 1998 இல் ஒருநாள் போட்டிகளிலும் 2001 இல் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய சார்பாக அறிமுகமானார். இந்தியா சார்பாகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் இவர். 2004 மார்ச்சில் பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் 309 ஓட்டங்களையும் 2008 மார்ச்சில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ஓட்டங்களையும் பெற்றார்.

தென்னாபிரிக்காவுக்கெதிராக 278 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றமை தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிவேகமான முச்சதச் சாதனையாகும்; மேலும் இலங்கைக்கு எதிராக டிசம்பர் 2009 மும்பை பிராபோன் அரங்கத்தில் 207 பந்துகளில் அடித்த 250 ஓட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமானதாகும். டிசம்பர் 8, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தூரில் நடந்த ஒரு நாள் போட்டியில் 149 பந்துகளுக்கு 219 ஓட்டங்கள் எடுத்து ஒரு நாள் ஆட்டங்களில் 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாகப் பெற்றார். தற்போதைக்கு ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை புரிந்தவராக உள்ளார்.[1]

[தொகு] துவக்க கால வாழ்க்கை

கிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் [2]; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம்.[3]

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. "ஒரு நாள் போட்டியில் உலக சாதனை". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் டிசம்பர் 08, 2011.
  2. virendarsehwag.net
  3. rediff.com


பா    தொ
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி {{{படிம தலைப்பு}}}
ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல்


"http://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்தர்_சேவாக்&oldid=1124462" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்