சுரேஷ் ரைனா
| சுரேஷ் ரைனா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சுரேஷ் குமார் ரைனா | |||
| பட்டப்பெயர் | சானு | |||
| பிறப்பு | 27 நவம்பர் 1986 | |||
| ரைனாவாரி, சம்மு காசுமீர், இந்தியா | ||||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | 26 சூலை 2010: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | 16 திசம்பர் 2010: எ தென்னாபிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 159) | 30 சூலை 2005: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 21 சனவரி 2011: எ தென்னாபிரிக்கா | |||
| சட்டை இல. | 48 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2002/03–நடப்பு | உத்தரப் பிரதேசம் | |||
| 2008–நடப்பில் | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வுகள் | ஒ.ப.து கள் | முதல்தரம் | ப.அ | |
| ஆட்டங்கள் | 11 | 110 | 59 | 153 |
| ஓட்டங்கள் | 710 | 2,628 | 4,057 | 4,143 |
| துடுப்பாட்ட சராசரி | 29.58 | 35.51 | 43.15 | 36.99 |
| 100கள்/50கள் | 1/6 | 3/16 | 7/27 | 4/28 |
| அதிக ஓட்டங்கள் | 120 | 116* | 203 | 129 |
| பந்து வீச்சுகள் | 891 | 458 | 1,260 | 1,158 |
| இலக்குகள் | 13 | 7 | 18 | 25 |
| பந்துவீச்சு சராசரி | 40.31 | 57.85 | 34.27 | 38.76 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 2/1 | 1/13 | 3/31 | 4/23 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 20/– | 47/– | 63/– | 62/– |
|
22 சனவரி, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
சுரேஷ் குமார் ரைனா (Suresh Kumar Raina, காசுமீரி: सुरेश कुमार रैना, سریش کمار رائنا ) (பிறப்பு:27 நவம்பர் 1986) சம்மு காசுமீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் வாழ்ந்திருந்த ரைனாவாரி சிறுநகரைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்டக்காரர்.[1] சூலை 2005 முதல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடி வருகிறார். 2006ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரது முதல் தேர்வு ஆட்டம் 26 சூலை 2010இல் இலங்கைக்கு எதிராகவே துவங்கியது. உள்நாட்டுப் போட்டிகளில் ரஞ்சிக் கோப்பைக்கு உத்தரப் பிரதேசத் துடுப்பாட்ட அணிக்கும் துலீப் கோப்பைக்கு மத்திய பிராந்தியத்திற்கும் ஆடுகிறார். ஆற்றல்மிகு இடதுகை மட்டையாளரான இவரது களத்தடுப்பிற்கு புகழ்பெற்றவர். அவ்வப்போது புறச் சுழற் பந்து வீசுவதும் உண்டு.
பொருளடக்கம் |
நூறுகள் [தொகு]
தேர்வு துடுப்பாட்ட நூறுகள் [தொகு]
- ஓட்டங்கள் நெடுவரிசையில், * எனக் குறிப்பிடப்பட்டால் ஆட்டமிழக்காது எனப் பொருள் கொள்க.
- ஆட்டங்கள் நெடுவரிசையில் ஆட்ட எண் என்பது விளையாட்டளாரின் வாழ்நாளில் எத்தனையாவது ஆட்டம் எனப் பொருள் கொள்க.
| எண் | ஓட்டங்கள் | ஆட்ட எண் | எதிர் | நகரம்/நாடு | நிகழிடம் | ஆண்டு |
|---|---|---|---|---|---|---|
| [1] | 120 | 1 | கொழும்பு, இலங்கை | சிங்களவர் விளையாட்டரங்கம் | 2010 |
சர்ச்சைகள் [தொகு]
இலங்கைப் பயணத்தின்போது இவரை ஓர் பெண் சூதாட்ட முகைவருடன் கண்டதாக இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் புகார் அளித்ததை இந்தியத் துடுப்பாட்ட வாரியம் விசாரிக்கவில்லை என பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஆய்வு செய்வதாக செய்திகள் வெளியாயின. இவ்வாறு எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என இந்திய வாரிய தொடர்பாளர் மறுத்தார். இது குறித்த தெளிவான நிலை அறியப்படவில்லை. [2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "A Pilgrimage to Rainabari". பார்த்த நாள் 2010-12-02. "Suresh Raina, the promising test cricketer, too hailed from Rainabari."
- ↑ "Suresh Raina linked to bookie? BCCI rejects charge". Hindustan Times (2010-10-24). பார்த்த நாள் 2010-12-20.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Suresh Raina தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சுரேஷ் ரைனா
- Player Profile: சுரேஷ் ரைனா from CricketArchive
| 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
| கவுதம் கம்பீர் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சுரேஷ் ரைனா | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | விராட் கோலி | நேரா | ஸ்ரீசாந்த் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | பியூஷ் சாவ்லா | அசுவின் | பயிற்றுனர் கிர்ஸ்டன் | ||