பா. விஜய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பா. விஜய்
பிறப்பு பாலகிருஷ்ணன் விஜய்
அக்டோபர் 20, 1974 (1974-10-20) (அகவை 37)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
புனைப்பெயர் வித்தகக் கவிஞர்
தொழில் நடிகர், பாடலாசிரியர்
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியா
கல்வி முதுகலைப் பட்டம்
கல்வி நிலையம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
எழுதிய காலம் 1996 முதல் தற்போதுவரை
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சிறந்த வசனத்திற்கான தேசிய திரைப்பட விருது
2005 ஆட்டோகிராப்
துணைவர்(கள்) லேனா
பிள்ளைகள் வி.விஷ்வா, வி.விஸ்னா
http://www.pavijay.in

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். இயக்குனர் கே. பாக்யராஜ் அவர்களின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 300 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். தமிழக முதல்வர் கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்கள் வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். காப்பிய கவிஞர் வாலி அவர்கள் தமது கலையுலக வாரிசாக பா.விஜய் அவர்களை அறிவித்து பெருமையளித்துள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] நடித்த படங்கள்

[தொகு] விருதுகள்

  • சினிமா எக்ஸ்பிரஸ் விருது - 2000
  • தமிழ்நாடு திரைப்படச் சங்க விருது - 2001
  • ராஜ் டி.வி. உழைப்பாளர் விருது - 2001
  • வெரைட்டி விருது - 2001
  • பாலர் ஜூனியர் சேம்பர் விருது - 2001
  • லயன்ஸ் கிளப் கவிச்சிற்பி விருது - 2002
  • தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது - 2002
  • சர்வதேச தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது - 2003
  • வெற்றித் தன்னம்பிக்கையாளர் விருது - 2003
  • சன் பீம் கல்வி நிறுவன விருது - 2003
  • ட்ரைனிட்டி விருது - 2004
  • பாட்டருவி விருது - திருவள்ளுவர் மன்றம் கர்நாடகம் - 2004
  • தன்னம்பிக்கையாளர் விருது - 2004
  • த.மு.எ.ச. துறைமுகம் விருது - 2004
  • தேசிய விருது - 2004
  • தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது - 2005
  • பாரத் அசோசியேஸன் விருது - 2005
  • ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது - 2005
  • எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது - 2005
  • சென்னை நண்பர்கள் விருது - 2005
  • வெரைட்டி விருது - 2005
  • தினகரன் விருது - 2005
  • பிலிம் டுடே விருது - 2005
  • எம்.ஜி.ஆர். விருது - 2006
  • மலேசிய ஜி.எம்.டி. விருது - 2006
  • தஞ்சை செங்குந்தர் மகாசன விருது - 2006
  • செம்பனார்கோயில் லயன்ஸ் கிளப் வழங்கிய இளம் சாதனையாளர் விருது - 2006
  • கÏர் ரோட்டரி கிளம்ப்பின் மொழிக்காவலர் விருது - 2006
  • கலைமாமணி விருது - 2007
  • ராஜீவ்காந்தி – முப்பனார்விருது - 2007
  • கலைவித்தகர் - கண்ணதாசன் விருது - 2007
  • இளம் கவி அரசர் விருது - கனடா - 2007
  • பாரத் சினி விருது - 2007
  • எம்.ஜி.ஆர். - சிவாஜி விருது - 2008
  • திரை இசை விருது - 2008
  • ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த தொலைக்காட்சி பாடலாசிரியருக்கான விருது - 2008
  • ப்லீம்பேர் விருது - 2008


[தொகு] படைப்புகள்

  1. இந்தச் சிப்பிக்குள்
  2. சுதியோடு வந்த நதி
  3. நந்தவனத்து நட்சத்திரங்கள்
  4. நிழலில் கிடைத்த நிம்மதி
  5. போர்ப் புறா
  6. ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது
  7. உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று)
  8. உடைந்த நிலாக்கள்(பாகம் இரண்டு)
  9. உடைந்த நிலாக்கள் (பாகம் மூன்று)
  10. சில்மி~pயே - முழுமையான காதல் கவிதை தொகுப்பு
  11. வானவில் பூங்கா (துபாயில் வெளியிட்டது)
  12. காற்சிலம்பு ஓசையிலே(பாகம் ஒன்று)
  13. காற்சிலம்பு ஓசையிலே (பாகம் இரண்டு)
  14. நம்பிக்கையுடன்
  15. கண்ணாடி கல்வெட்டுகள் - கல்கி தொடர்
  16. அரண்மனை இரகசியம் (நாவல்)
  17. பா.விஜய் பாடல்கள் (பாகம் ஒன்று)
  18. பா.விஜய் பாடல்கள் (பாகம் இரண்டு)
  19. உடைந்த நிலாக்கள் பகுதி ஒன்று (ஒலிநாடா)
  20. பா.விஜய் கவிதைகள் (ஒலிநாடா)
  21. வினாயகர் சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா)
  22. கடவுள் வருகிறான் ஜாக்கிரதை (கவிதை)
  23. காதல்@காதலிகள்.காம் (கவிதை)
  24. பெண்கள் பண்டிகை (கவிதை)
  25. இரண்டடுக்கு ஆகாயம் (கவிதை)
  26. ஐஸ்கட்டி அழகி (கவிதை)
  27. காகித மரங்கள் (கவிதை)
  28. கைதட்டல் ஞாபகங்கள் (கவிதை)
  29. அடுத்த அக்னி பிரவேசம் (கவிதை)
  30. இருநாவல்கள் (நாவல்);
  31. போர்ப்புறா - வாழ்க்கைத்தேடி வானம்பாடிகள்
  32. 18 வயசுல - முழுமையான காதல் கவிதை தொகுப்பு
  33. வள்ளுவர் தோட்டம்
  34. மஞ்சள் பறவை
  35. பேச்சுலர் ரூம்
  36. கறுப்பு அழகி
  37. ஆப்பில் மாதிரி உன்னை அப்படியே...!
  38. இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு)
  39. நண்பன் நண்பி
  40. ஒரு கூடை நிலா
  41. கண்ணே நீ கயாஸ் தியரி
  42. . நட்பின் நாட்கள்
  43. செய்
  44. சமர்
  45. ஞாபகங்கள்
  46. பா.விஜய் ஓர் பார்வை
  47. மோது முன்னேறு
  48. தோற்பது கடினம்
  49. என் பாட்டுக்கரையில்
  50. சௌபர்னிகா

[தொகு] பிரபலமான பாடல்களில் சில...

  • 01. மணிமாடக் குயிலே நீ -- ஞானப்பழம்
  • 02. காதல் வெண்ணிலா -- வானத்தைப் போல --
  • 03. பார்த்துப் பார்த்து -- நீ வருவாய் என
  • 04. சுவாசமே! -- தெனாலி
  • 05. கருப்புதான் எனக்குப் பிN;சச கலரு -- வெற்றிக்கொடி கட்டு
  • 06. தேவதை வம்சம் நீயே -- சினேகிதியே
  • 07. மல்லிகை ப+வுக்கு மதுர விலாசம் -- சுந்தரா டிராவல்ஸ்
  • 08. தில்.. தில்.. -- தில்
  • 09. ஏ! சம்பா... -- பாண்டவர்ப+மி
  • 10. ஏ! அசைந்தாடும் காற்றுக்கும் -- பார்வை ஒன்றே போதுமே
  • 11. நெருப்பு கூத்தடிக்குது -- துள்ளுவதோ இளமை
  • 12. பைன் ஆப்பிள் -- சமுத்திரம்
  • 13. கவிதைகள் சொல்லவா -- உள்ளம் கொள்ளை போகுதே
  • 14. முதலாம் சந்திப்பில் -- சார்லி சாப்ளின்
  • 15. யாமினி... யாமினி... -- ஏய்! நீ ரொம்ப அர்காய் இருக்கிறாய்
  • 16. பொம்பளைங்க காதலத்தான் -- உன்னை நினைத்து
  • 17. மனசே மனசே -- ஏப்ரல் மாதத்தில்
  • 18. ரயிலே ரயிலே -- பைவ் ஸ்;டார்
  • 19. இச்சுத்தா இச்சுத்தா -- ரன்
  • 20. நெஞ்சம்; ஒருமுறை நீயென்றது -- வசீகரா
  • 21. ஏ...ஏ...என்னாச்சு உனக்கு -- காதல் வைரஸ்
  • 22. என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு -- சொக்கத் தங்;கம்
  • 23. பக் பக் மாடப்புறா -- பார்த்தீபன் கனவு
  • 24. எனக்கோரு கேர்ள்ப்ரண்ட் வேணுமடா -- பாய்ஸ்
  • 25. இந்தாN கப்பக் கெர்ழங்கே -- தூள்
  • 26. மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே -- பிரியமான தோழி
  • 27. அனார்க்கலி... ஆகாயம் நீ... -- கண்களால் கைது சேய்
  • 28. அப்படிப்போடு -- கில்லி
  • 29. என் ஆசை மைதிலியே -- மன்மதன்
  • 30. ஒவ்வொரு ப+க்களுமே -- ஆட்டோகிராப்
  • 31. ஒரு வார்த்தை பேச -- ஐயா
  • 32. டிங்;...டாங்... கோயில்மணி -- ஜி
  • 33. மனதிலே ஒரு வேகம் -- டான்சர்
  • 34. என்ன தந்திடுவேன் -- சதுரங்கம்
  • 35. எலந்தப் பழம் -- மதுர
  • 36. அழகின்னா அழகி -- எனக்கு 20 உனக்கு 18
  • 37. கிளுகிளுப்பான காதலியே -- சுள்ளான்
  • 38. தீப்பிடிக்கத் தீப்பிடிக்க -- அறிந்தும் அறியாமலும்
  • 39. ஒருமுறைதான் ஒருமுறைதான் -- தவமாய் தவமிருந்து
  • 40. சின்னச் சின்னப் ப+க்கள் -- ராமச்சந்திரா
  • 41. ஓ..நிலா..... நிலா -- பேசாத கண்ணும் பேசும்
  • 42. உன்னைக் கொடு என்னைத் தருவேன் -- உன்னைக் கொடு என்னைத் தருவேன்
  • 43. இருவிழி இருவிழி -- தவசி
  • 44. எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது -- வின்னர்
  • 45. காதலித்தால் ஆனந்தம் -- ஸ்டைல்
  • 46. ஒரு பார்வையால் -- ஆன்பே உன் வாசம்
  • 47. செம்பருத்திப் ப+வே -- காதல் சொல்ல வந்தேன்
  • 48. ஒரு பௌர்ணமி நிலவு -- ராஜா
  • 49. ஜீன் ஜீலை மாதத்தில் -- ப்ரியமானவளே
  • 50. சூடித்தந்த சுடர்கொடியே -- ஆனந்தம்
  • 51. டோலி... டோலி... டோலிரே -- புன்னகைதேசம்
  • 52. கொஞ்;சிக்கொஞ்;சிப் பேசிவரும் தமிழ் போல -- வேதம்
  • 53. ஜீலை மலர்களே -- பகவதி
  • 54. வைத்த கண் வைத்தது யாரோடி -- போஸ்
  • 55. வா மசக் காற்றே! -- குறும்பு
  • 56. மௌனமே பார்வையாய் -- அன்பே சிவம்
  • 57. நீ மலரா...மலரா... மலரானால் -- அற்புதம்
  • 58. பூப்ப+வாய் புன்னகைக்கும் இவள் -- பாலா
  • 59. வெண்ணிலவே -- லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன்
  • 60. வினோதமானவளே -- லவ்லி
  • 61. நீ ரகசியமாய் பார்க்கிற பார்வை -- சத்ரபதி
  • 62. அத்திந்தோம் -- சந்திரமுகி
  • 63. சாமிக்கிட்ட -- தாஸ்
  • 64. சின்ன மகாராணி -- பிரியசகி
  • 65. உலகமடா.. உலகமடா.. -- ஏபிசிடி
  • 66. ஏ.. பங்;களி -- மஜா
  • 67. வா...வா... என் தலைவா -- சச்சின்
  • 68. ஒல்லி... ஒல்லி... இடுப்பே -- ஆதி
  • 69. தொட்டுட்ட.. தொட்டுட்ட -- ஆறு
  • 70. முண்டாசு சூரியனே! -- சண்டைக்கோழி
  • 71. அல்லே துல்லாலே -- பரமசிவன்
  • 72. நண்பா.. நண்பா.. -- பிப்ரவரி 14
  • 73. ஏதோ நடக்குது -- பாரிஜாதம்
  • 74. தீப்பிடிக்க தீப்பிடிக்க -- பட்டியல்
  • 75 யாரு யாரு -- லீ
  • 76 இது தானா காதல் மழை -- பிறப்பு
  • 77 ஏன் எனக்கு மயக்கம் -- நான் அவன் இல்லை
  • 78 காக்க காக்க -- நான் அவன் இல்லை
  • 79 நண்பா… நண்பா… -- உற்சாகம்
  • 80 முதல் முதலாக -- மதுரை வீரன்
  • 81 கொஞ்;சம் -- மாயக்கண்ணாடி
  • 82 அருகினில் அருகினில் -- ஆரியா
  • 83. ஜீன் போனா ஜீலைக்காற்றே -- உன்னாலே உன்னாலே
  • 84. பூங்காற்றில் வாசம் வரும் -- நிறம்
  • 85. உன்னாலே உன்னாலே -- உன்னாலே உன்னாலே
  • 86. யாரும் தொடாத ஒன்றை -- அஜந்தா
  • 87. டோலு டோலு -- போக்கிரி
  • 88. நீ முத்தம் ஒன்று கொடுத்தால் -- போக்கிரி
  • 89. கல்லூரி சாலைகள் -- சிவப்பதிகாரம்
  • 90. வாடா வாடா ஆட்டத்திற்கு -- லட்சியம்
  • 91. ஒரு கூடை சன் லைட் -- சுpவாஜி
  • 92. முழுப்பாடல்கள் -- பில்லா
  • 93. வேண்டும் வேண்டும் -- தோட்டா
  • 94. ஒரு முகமோ -- பீமா
  • 95. மதுரைக்குப் போகாதடி -- அழகிய தமிழ்மகன்
  • 96. பல்லானதே -- குருவி
  • 97. மொழ மொழன்னு -- குருவி
  • 98. சகியே -- தாம் தூம்
  • 99. தாழ் திறவாய் -- வம்புச்சண்டை
  • 100. சொல்… சொல்.. சொல்லம்மா -- குசேலன்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பா._விஜய்&oldid=915021" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்