தேசிய இடைக்காலப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
المجلس الوطني الانتقالي
al-majlis al-waṭanī al-intiqālī
தேசிய இடைக்காலப் பேரவை (லிபியக் குடியரசு)
லிபியா கொடி லிபியா Seal
குறிக்கோள்
சுதந்திரம், நீதி, மக்களாட்சி
நாட்டுப்பண்
லிபியா,லிபியா,லிபியா
Location of லிபியா
     தே.இ.பே கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள்l     

     கதாஃபியின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள்

     சண்டை தொடர்கிறது
தலைநகரம் திரிப்பொலி[1]
ஆட்சி மொழி(கள்) லிபிய அராபி (de facto)
பெர்பேர் வழக்குமொழிகள்
நஃபூசி மொழி
மக்கள் லிபியன்
அரசு காபந்து அரசு
 -  தலைவர் முசுதஃபா அப்துல் ஜலீல்
 -  துணைத்தலைவர் அப்துல் ஹஃபீஸ் கோகா
 -  பிரதம அமைச்சர் [மகமூது ஜிப்ரில்
அமைப்பு
 -  2011 லிபிய எழுச்சி 17 பெப்ரவரி 2011 
 -  தேசியப் பேரவை நிறுவப்பட்டது 27 பெப்ரவரி 2011 

லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவை (National Transitional Council of Libya, அரபி: المجلس الوطني الإنتقالي, al-majlis al-waṭanī al-'intiqālī), சில நேரங்களில் இடைக்காலத் தேசியப் பேரவை (Transitional National Council),[2](Interim National Council),[3] அல்லது லிபிய தேசியப் பேரவை (Libyan National Council), 2011 லிபிய எழுச்சியைத் தொடர்ந்து கதாஃபிக்கு எதிரான இயக்கத்தினர் அமைத்த அரசு அமைப்பு ஆகும். இதன் உருவாக்கம் 27 பெப்ரவரி 2011 அன்று பெங்காசியில் அறிவிக்கப்பட்டது. அப்போது இதன் நோக்கமாக " புரட்சியாளர்களின் அரசியல் இடைமுகமாக" அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 5, 2011 அன்று "தான் மட்டுமே லிபியா மற்றும் லிபிய மக்களை பிரதிநிதிப்படுத்தும் சட்டபூர்வ அமைப்பாக" அறிவித்தது. [4][5][6]

மார்ச்சு 23,2011 அன்று இப்பேரவை மகமூது ஜிப்ரில் தலைமையில் ஓர் செயற்குழுவை அமைத்தது. லிபியாவில் ஓர் முறையான அரசமைபு ஏற்படும்வரை இப்பேரவையே சட்டபூர்வ அரசமைப்பாக பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது. [7] ஐக்கிய நாடுகள் அவையிலும் லிபியாவின் இடத்தை பெற்றுள்ளது.[8] மேலும் பல நாடுகள் அலுவல்முறையல்லாத தொடர்புகளை தேசிய இடைக்காலப் பேரவையுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளன; அவற்றில் சில பேரவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நிரந்த தூதரகங்களை பெங்காசியில் ஏற்படுத்தி உள்ளன.

பன்னாட்டு உறவு [தொகு]

     லிபியா      லிபியாவின் சட்டபூர்வ அரசாக தேசிய இடைக்காலப் பேரவையை ஏற்றுக்கொண்ட நாடுகள்      லிபியாவின் ஐ.நா இடத்தைப் பெற வாக்கெடுப்பு நடக்கும்வரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்      தேசிய இடைக்காலப் பேரவையை ஏற்க மறுக்கும் நாடுகள்

சூலை 2011இல் பன்னாட்டு உறுப்பினர்கள் அடங்கிய லிபியா தொடர்புக் குழுவினர் "லிபியாவின் சட்டபூர்வ அரசமைப்பாக" தேசிய இடைக்காலப் பேரவையை அறிவித்தது. [9][10] அரபு நாடுகள் கூட்டமைப்பு [11] மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்.[12]அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. செப்டம்பர் 16, 2011 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை லிபியாவின் ஐக்கிய நாடுகள் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவைக்கு வழங்க வாக்களித்தது. [8]

லிபியாவின் அரசராக கருதப்படும் முகமது எல் செனுசி இப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். [13]

மேற்கோள்கள் [தொகு]

  1. http://english.aljazeera.net/news/africa/2011/08/201182623316261938.html
  2. "The US recognises Libya's Transitional National Council". World Socialist Web Site. 20 July 2011. http://www.wsws.org/articles/2011/jul2011/pers-j20.shtml. Retrieved 29 July 2011. 
  3. March 31st Updates | Libya February 17th
  4. "Ferocious Battles in Libya as National Council Meets for First Time". NewsCore (via news.com.au). 6 March 2011. http://www.news.com.au/breaking-news/ferocious-battles-in-libya-as-national-council-meets-for-first-time/story-e6frfku0-1226016536676. Retrieved 6 March 2011. 
  5. The Interim Transitional National Council Decree 3, published 5 March 2011
  6. "Founding Statement of the Interim Transitional National Council". National Transitional Council (5 March 2011). மூல முகவரியிலிருந்து 7 March 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 March 2011.
  7. "Excerpts from Libya Contact Group Chair's Statement". Reuters. 15 July 2011. http://af.reuters.com/article/commoditiesNews/idAFLDE76E0W120110715. Retrieved 25 July 2011. 
  8. 8.0 8.1 Lederer, Edith (16 September 2011). "UN approves Libya seat for former rebels". San Jose Mercury News. http://www.mercurynews.com/news/ci_18910663. Retrieved 16 September 2011. 
  9. "Excerpts from Libya Contact Group Chair's Statement". Reuters. 15 July 2011. http://af.reuters.com/article/commoditiesNews/idAFLDE76E0W120110715. Retrieved 16 July 2011. 
  10. Black, Ian (15 July 2011). "Libyan Rebels Win International Recognition as Country's Leaders". The Guardian (London). http://www.guardian.co.uk/world/2011/jul/15/libyan-rebels-international-recognition-leaders. Retrieved 16 July 2011. 
  11. "Libyan Regime 'Lost Legitimacy'—Arab League". Philippine Daily Inquirer (13 March 2011). பார்த்த நாள் 25 March 2011.
  12. Staff (11 May 2011). "Foreign Minister Radosław Sikorski Visits Benghazi". Polish Ministry of Foreign Affairs. http://www.msz.gov.pl/Foreign,Minister,Radoslaw,Sikorski,visits,Benghazi,43100.html. Retrieved 20 May 2011. 
  13. "Libya's 'Exiled Prince' Urges World Action". Khaleej Times. பார்த்த நாள் 10 March 2011.

வெளியிணைப்புகள் [தொகு]


ஊடகங்கள்
பிற குழுக்கள்