இழ்சாக் கார்ட்டியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இழ்சாக் கார்ட்டியே
Jacques Cartier
Cartier.png
ஏறத்தாழ 1844 இல், தெயோஃவில் ஆமல் (Théophile Hamel) வரைந்த இழ்சாக்கசு கார்ட்டியேவின் படம்
பிறப்பு டிசம்பர் 31, 1491
செயின்ட்-மாலோ, பிரான்சு
இறப்பு செப்டம்பர் 1, 1557
செயின்ட்-மாலோ, பிரான்சு
அறியப்படுவது முதன் முறையாக கனடாவைப் பற்றி ஆவணப்படுத்தி, கனடாவை பிரான்சின் நாடாக உரிமை கொண்டாடினார்
தொழில் பிரான்சிய கலவர் (navigator), புதுப்புலம் ஏகுநர் (explorer)


இழ்சாக் கார்ட்டியே (Jacques Cartier) (டிசம்பர் 31, 1491–செப்டம்பர் 1, 1557) ஒரு புகழ்பெற்ற பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் (explorer). இவர் இன்றைய கனடா நாட்டினை முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு அறிவித்து பிரான்சின் உடைமையாக உரிமை வேண்டினார். கனடாவில் உள்ள செயின்ட் லாரன்சு வளைகுடாவையும், செயின்ட் லாரன்சு ஆற்றையும் முதன் முறையாக விளக்கி அதன் நில வரைபடங்களை உருவாக்கினார். [1] லாரன்சு ஆற்றுக் கரைப்பகுதியிலும், ஓக்கெலாக (Hochelaga) (மான்ட்ரியால் தீவு) ஊர்ப் பகுதியிலும், சிட்டாடகோனா (Stadaconna) (கியுபெக் நகரம்) ஊர்ப்பகுதியிலும் வாழ்ந்த செயின்ட் லாரன்சு இரோக்குவா மக்களையும், அந்நிலப்பகுதியையும் "கனடா நாடு" என்று அறிவித்தார்.


பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை வரலாறு

இழ்சாக் கார்ட்டியே 1491 இல் பிரான்சில் செயின்ட்-மாலோ என்னும் இடத்தில் பிறந்தார்[2]. இவர் பிறந்த செயின்ட்-மாலோ பிரிட்டனியின் டச்சியைச் (duchy of Brittany) சேர்ந்த வடகிழக்கின் கோடியில் உள்ள ஒரு துறைமுகம். இது பின்னர் 1532 இல் பிரான்சுடன் சேர்க்கப்பட்டது. கார்ட்டியே மதிக்கத்தக்க கப்பற்காரராக (கம்மாறர்) இருந்தார். பின்னர் அப்பகுதியில் செல்வாக்குடைய குடும்பத்தைச் சேர்ந்த மாரி காத்தரீன் டெ கிரான்செ (Mary Catherine des Granches) என்பாரை மணந்தபின் இவர் குமுகத்தில் தன் செல்வாக்கு நிலையை உயர்த்திக்கொண்டார். இவருடைய உயர்ந்த குமுக நிலையை அறிய இவருடைய பெயர் அடிக்கடி செயின்ட்-மாலோவில் உள்ள சர்ச்சில் உள்ள பிறப்புப் பதிவேட்டில், காட்பாதர் (Godfather) அல்லது சாட்சியாக குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து அறியலாம் .[3] .

[தொகு] முதல் கடற்செலவு 1534

[தொகு] இரண்டாம் கடற்செலவு 1535–1536

[தொகு] மூன்றாம் கடற்செலவு 1541-1542

[தொகு] ஓய்வு

கார்ட்டியே கடைசியாக தன் வாழ்வை பிரான்சில் செயின்ட்-மாலோ பகுதியில் கழித்தார். அங்கு போர்த்துகீசிய மொழிபெயர்ப்பாளராக அவ்வப்பொழுது இருந்து உதவினார். அவர் தம் 65 அல்லது 66 ஆவது அகவையில் விரைந்து பரவிய தொற்றுநோயால் இறந்தார்.[4] இவருக்குப் பின்னர் 1608 வரையிலும் கனடாவில் வேறு ஐரோப்பிய குடியேற்றங்கள் ஏதுவும் நிகழவில்லை. பின்னர் 1608 இல் சாமுவேல் சாம்ப்பிளேன் என்பவர் இன்றைய கியுபெக் நகரத்தை நிறுவினார்.


[தொகு] அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. இவருடைய நிலவரை படங்கள் இன்று கிடைக்கவில்லை என்றாலும், இது பற்றி இழ்சாக்கெசு நோயெல் (Jacques Noël) என்பார் 1587 இல் எழுதிய தன் கடிதம் ஒன்றில் குறித்திருந்தார். இதனை ரிச்சர்டு அக்லுயிட் (Richard Hakluyt) என்பார், கார்ட்டியேவின் 3 ஆவது கடற்பயணம் என்னும் தொடர்ப்பில் அச்சிட்டிருந்தார். த பிரிசிப்பால் நாவிகேழ்சன்சு, லண்டன், சி. பிசப், 1600.
  2. பிறப்பின் சர்ச் சான்றிதழ் ஏதும் கிடக்கவில்லை, ஆனால் கார்ட்டியே தன் அகவையை (வயதை) குறைந்தது மூன்று கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். பார்க்கவும்: Marcel Trudel, Histoire de la Nouvelle-France, vol. 1, p. 68.
  3. Biggar, H.P. A Collection of Documents relating to Jacques Cartier and the Sieur de Roberval, Ottawa, Public Archives of Canada, 1930. Over 20 baptisms cited.
  4. Parks Canada - Cartier-Brébeuf National Historic Site of Canada - Natural Wonders & Cultural Treasures - Jacques Cartier, Explorer and Navigator

[தொகு] உசாத்துணை

  • Ramsay Cook, ed (1993). The Voyages of Jacques Cartier. Toronto: University of Toronto Press. ISBN 0802050158. 
  • Trudel, Marcel (1966). "Cartier, Jacques". Dictionary of Canadian Biography. Vol. 1. Toronto: University of Toronto Press.. பக். pp. 154–172. online
  • Trudel, Marcel (1973). The Beginnings of New France, 1524–1663. Toronto: McClelland and Stewart.  வார்ப்புரு:ASIN

[தொகு] வெளி இணைப்புகள்

டௌஃவினின் 1543 ஆண்டு கனடா நிலப்படம். இதில் கார்ட்டியேவின் புதிய கண்டுபிடிப்புப்பகுதிகள் காட்டப்பட்டுள்லன
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்