சோசலிசக் கட்சி (பிரான்சு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோசலிசக் கட்சி | |
|---|---|
| தலைவர் | மார்ட்டீன் ஓப்ரி |
| தொடக்கம் | 1969 |
| தலைமையகம் | 10, ரூ டெ சோல்பெரினோ 75333 பாரிசு செடெக்சு 07 |
| இளைஞர் அணி | சோசலிச இளைஞர் இயக்கம் |
| அதிகாரப் பட்ச அரசியல் நிலைப்பாடு/ கொள்கை |
சமத்துவ மக்களாட்சி, சனநாயக சோசலிசம் |
| பன்னாட்டுக்கூட்டு | பன்னாட்டு சோசலிஸ்டுகள் |
| ஐரோப்பிய நாடாளுமன்ற குழு | சோசலிச மக்களாட்சி முற்போக்குக் கூட்டணி |
| அதிகாரப் பட்ச நிறம் | சிவப்பு, இளஞ்சிவப்பு |
| தளம் | www.parti-socialiste.fr |
சோசலிசக் கட்சி (Socialist Party, பிரெஞ்சு: Parti socialiste, PS) பிரான்சின் சமத்துவ மக்களாட்சி[1][2] அரசியல் கட்சி ஆகும். இது பிரான்சின் மிகப்பெரிய நடு-இடதுசாரிக் கட்சி ஆகும். பிரான்சிய நடப்பு அரசியலில் முதன்மை வகிக்கும் இரண்டு கட்சிகளில் ஒன்றாக உள்ளது. முன்னதாக பன்னாட்டு தொழிலாளர் கட்சியின் பிரான்சியக் கிளையிலிருந்து 1969இல் மாற்றம் பெற்றது. இதன் தற்போதைய தலைவியாக மார்ட்டன் ஓப்ரி உள்ளார். [3]
பிரான்சிய சோசலிசக் கட்சி ஐரோப்பிய சோசலிச கட்சி மற்றும் பன்னாட்டு சோசலிஸ்ட்கள் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Merkel, Wolfgang; Alexander Petring, Christian Henkes, Christoph Egle (2008). Social Democracy in Power: the capacity to reform. London: Taylor & Francis. ISBN 0-415-43820-9.
- ↑ Parties and Elections in Europe: The database about parliamentary elections and political parties in Europe, by Wolfram Nordsieck
- ↑ Ollivier, Christine (22 November 2008). "Aubry wins French socialist Party leadership". Toronto Star. http://www.thestar.com/News/World/article/541925. Retrieved 23 May 2010.
வெளி இணைப்புகள் [தொகு]
- (பிரெஞ்சு) Parti Socialiste – Official site