மதுரை மணி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மதுரை மணி ஐயர் (அக்டோபர் 25, 1912 - ஜூன் 8, 1968) கருநாடக இசையுலகில் புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர். சுவரம் பாடுவதில் வல்லுனராக கருதப்பட்டார்.

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது. மதுரையில் எம்.எஸ்.ராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் ராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனம் அவர்களின் சகோதரர்.

சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதருடைய மாணவர். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார்.

சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர், இன்னும் எவ்வளவோ பட்டங்களைப் பெற்ற மணி ஐயர் தம் பெருநோய் காரணமாக திருமணம் முடிக்கவில்லை.

ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமிழிலக்கியத்தில் தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நெருக்கமான உறவுள்ளவராக இருந்தார்.

சுவரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_மணி_ஐயர்&oldid=1009530" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்