டிம்பிள் கபாடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிம்பிள் கபாடியா
Dimple kapadia 54.jpg
இயற் பெயர் டிம்பிள் சுன்னிபாய் கபாடியா
பிறப்பு ஜூன் 8, 1957 (1957-06-08) (அகவை 57)
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1973; 1984–இன்றுவரை
துணைவர் ராஜேஷ் கன்னா (1973-1984) (விவாகரத்து)

டிம்பிள் சுன்னிபாய் கபாடியா (ஜூன் 8, 1957 அன்று பிறந்தவர்) இந்திய திரைப்படத் துறையில் கவர்ச்சி நடிகை. தன்னுடைய ஆரம்பகால தொழில் வாழ்க்கையில் பாபி மற்றும் சாகர் போன்ற வர்த்தக திரைப்படங்களில் நடித்திருந்தார், ஆனால் பின்னர் ருடாலி மற்றும் லேகின் போன்ற மாற்றுத் திரைப்படங்களில் தீவிரமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார்.[1][1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கபாடியா குஜராத்திய தொழிலதிபரான சுன்னிபாய் கபாடியா மற்றும் பெட்டியின் மூத்த மகளாவார். [2]

தொழில் வாழ்க்கை[தொகு]

அவர் ராஜ் கபூர் அவர்களால் தன்னுடைய 1973 ஆம் ஆண்டுத் திரைப்படமான பாபி யில் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த நேரத்தில் கபாடியா பதினாறு வயதே நிரம்பியிருந்தார். அவர் நடிகர் ராஜேஷ் கன்னாவை 16 வது வயதில் திருமணம் செய்துகொண்டார், பாபி திரைப்படம் வெற்றியடைந்தபோதிலும் தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர் திரைப்படத் துறையை விட்டு விலகினார்.[3]

விவாகரத்திற்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டில் சாகர் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைப்படத் துறைக்குத் திரும்பினார். இதில் அவர் மீண்டும் தன்னுடைய பாபி திரைப்பட இணை நடிகரான ரிஷி கபூர் உடன் தோன்றினார். சாகர் திரைப்படத்தில் கபாடியா சிறிது நேரம் மேலாடையற்ற காட்சியில் தோன்றினார். அந்த நேரத்தில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[4] அதன் பிறகு அவர் துணிச்சலான பல கதாபாத்திரங்களைச் செய்தார். ஜான்பாஸ்ஸில் அனில் கபூர் உடனான அவருடைய பாலியல் காட்சி மிகத் துணிச்சலானது என்று இப்போதும் கருதப்படுகிறது.

1980 ஆம் ஆண்டுகள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முழுவதும் அவர் பல படங்களில் தோன்றினார். 1993 ஆம் ஆண்டின் ருடாலி யில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்குச் சிறந்த நடிகைக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றார். 2001 ஆம் ஆண்டில் தில் சாஹ்தா ஹை திரைப்படத்தில் ஒரு குடிகாரியாக அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் ரிஷி கபூருடன் பியார் மேய்ன் டிவிஸ்ட் டில் இணைந்து நடித்தார். இது அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படத்திற்கு இருபது வருடங்களுக்குப் பிறகு மற்றும் தங்களுடைய முதல் படம் முடிந்து முப்பத்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகானது. 2006 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய முதல் ஆங்கில-மொழித் திரைப்படமான பீயிங் சைரஸ்-இல் நடித்தார். மூத்த டிம்பிள் தற்போது பண்பட்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்கிறார். "லக் பை சான்ஸ்" இல் அடாவடியான தாயாக என்றும் நினைவில் நிற்கும் நகைச்சுவை கதாபாத்திரம் உட்பட அம்மா அல்லது பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

அவர் நடிகர் ராஜேஷ் கண்ணாவை, தன்னுடைய முதல் திரைப்படம் பாபி வெளிவருவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே, 1973 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய இரு மகள்கள் டிவிங்கிள் கண்ணா மற்றும் ரிங்கி கண்ணா ஆகியோரை வளர்ப்பதற்காக அவர் தன்னுடைய நடிப்புத் தொழிலை விட்டு பன்னிரண்டு ஆண்டுகள் விலகி இருந்தார்.

1984 ஆம் ஆண்டில் அவர் கண்ணாவை விவாகரத்து செய்துவிட்டு நடிப்புத் துறைக்கு மீண்டும் திரும்பினார். அவருடைய மகள்களும் நடிகைகளானார்கள், அது போலவே அவருடைய இளைய சகோதரி சிம்பிள் கபாடியாவும் நடிகையானார். அவருடைய மற்றொரு சகோதரி, ரீம் கபாடியா மர்மமான சூழலில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மகள் டிவிங்கிள் கண்ணா, நடிகர் அக்ஷய் குமார்-ஐத் திருமணம் செய்துள்ளார்.

விருதுகள்[தொகு]

திரைப்படப் பட்டியல்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருது
முன்னர்
Hema Malini
for Seeta Aur Geeta
Best Actress
for Bobby
tied with
Jaya Bachchan
for Abhimaan

1974
பின்னர்
Jaya Bachchan
for Kora Kagaz
முன்னர்
Shabana Azmi
for Bhavna
Best Actress
for Saagar

1986
பின்னர்
N/A
முன்னர்
N/A
Best Actress (Critics)
for Rudaali

1994
பின்னர்
N/A
முன்னர்
Amrita Singh
for Aaina
Best Supporting Actress
for Krantveer

1995
பின்னர்
Farida Jalal
for Dilwale Dulhaniya Le Jayenge
தேசிய திரைப்பட விருது
முன்னர்
Moyola Goswami
for Firingoti
Best Actress
for Rudaali

1993
பின்னர்
Sobhana
for Manichithrathazhu

குறிப்புகள்[தொகு]

பிற இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டிம்பிள்_கபாடியா&oldid=1431254" இருந்து மீள்விக்கப்பட்டது