கர்நாடக மாநில நாள்
| கர்நாடக ராஜ்யோத்சவா ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯೋತ್ಸವ |
|
|---|---|
மாநில நாளன்று டொல்லு குனிதா என்ற பாரம்பர்ய நடனமாடும் பெண்கள் |
|
| மாற்றுப் பெயர் | கன்னட ராஜ்யோத்சவா, கர்நாடகம் உருவான நாள் |
| அனுசரிப்பவர்கள் | இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கன்னடியர்கள் [1] |
| வகை | மாநிலம் |
| முக்கியத்துவம் | தென்னிந்தியாவில் கன்னடம் பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கர்நாடக மாநிலம் உருவாதல் |
| நாள் | நவம்பர் 1 |
| கொண்டாட்டங்கள் | கன்னடக் கொடியை ஏற்றுதல், ஊர்வலங்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், ராஜ்யோத்சவா விருதுகள்[2] |
கர்நாடக மாநில நாள் (Karnataka Formation Day) அல்லது (கர்நாடக/கன்னட மாநிலம் உருவான நாள் என்று பொருள்படும்) கர்நாடக / கன்னட ராஜ்யோத்சவா (கன்னடம்: ಕನ್ನಡ ರಾಜ್ಯೋತ್ಸವ) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. கன்னட மொழி பேசும் தென்னிந்தியாவின் பகுதிகளை ஒருங்கிணைத்து இதே நாளில் 1956ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானதை இந்நாள் கொண்டாடுகிறது. [3]
கொண்டாட்டங்கள்[தொகு]
கர்நாடக மாநிலத்தில் இந்த நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4] மேலும் உலகெங்கும் உள்ள கன்னடியர்களும் இந்த நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொண்டாடுகிறார்கள்.[1] மாநில முதல்வரும் ஆளுனரும் கன்னடக் கொடியை ஏற்றி உரையாற்ற கர்நாடக மாநில அரசு ராஜ்யோத்சவா விருதுகளை வழங்குவதுடன் [5] சமூக விழாக்கள், இசைக்குழுக்கள், கன்னட நூல்கள் வெளியீடு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Dubai: Karnataka Sangha Celebrates Karnataka Rajyotsava
- ↑ Times of India - Rajyotsava award list soars to 90
- ↑ Kannadigas celebrate Karnataka Rajyotsava on Nov 1
- ↑ Festivals of India - Rajyotsava Day
- ↑ IBN Live - Karnataka Governor greets people ahead of 'Rajyotsava Day'
- ↑ The Hindu - ‘Sacrifice of Kannadigas should be remembered'