யோனாசு சால்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோனாசு சால்க்
1959 இல் யோனாசு சால்க்
பிறப்புயொனாசு சால்க்
Jonas Salk
(1914-10-28)அக்டோபர் 28, 1914
நியூயார்க் நகரம்
இறப்புசூன் 23, 1995(1995-06-23) (அகவை 80)
கலிபோர்னியா,
அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
துறைமருத்துவ ஆய்வு,
நச்சுயிரியல், நோய்ப் பரவல் இயல்
பணியிடங்கள்பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம்
சால்க் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்நியூயார்க் நகரக் கல்லூரி
நியூயார்க் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்தாமசு பிரான்சிசு, இளை.
அறியப்படுவதுமுதல் போலியோ தடுப்பூசி
விருதுகள்லாசுக்கர் விருது (1956)
துணைவர்
டோனா லின்ட்சி (தி. 1939⁠–⁠1968)

பிரான்சுவா கிலொட் (தி. 1970⁠–⁠1995)
கையொப்பம்

யோனாசு எட்வர்ட் சால்க் (Jonas Edward Salk, அக்டோபர் 28, 1914 - சூன் 23, 1995) என்பவர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளரும், நச்சுயிரியலாளரும் ஆவார். அமெரிக்க யூதப் பெற்றோருக்கு நியூயார்க் நகரில் பிறந்தவர். இவரே முதன் முறையாக போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதித்தவர்.

1957 aஅம் ஆண்டில் சால்க் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது, போருக்குப் பின்னரான ஐக்கிய அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வந்தது. ஆண்டுதோறும் கொள்ளைநோய்கள் அதிகரித்து வந்தன. 1952 ஆம் ஆண்டில் 58,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 21,269 பேர் முடக்குவாதத்திற்குள்ளாயினர்[1] இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

1947 ஆம் ஆண்டில், சால்க் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948 இல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார். இப்பணிக்காக தனது அடுத்த ஏழு ஆண்டுகளை அவர் செலவழித்தார். சால்க் தடுப்பூசியை சோதிப்பதற்கு 1,800,000 இற்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் பங்கு கொண்டனர்.[2] 1955 ஏப்ரல் 12 இல் சால்க் தடுப்பூசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சால்க் அதிசய மனிதர் எனப் போற்றப்பட்டார். அந்நாள் ஏறத்தாழ ஒரு பொது விடுமுறையாகவே கணிக்கப்பட்டது. தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் "ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா?" எனக் கேட்டார்.[3]

1960 இல் யோனாசு சால்க் கலிபோர்னியாவில் உயிரியல் படிப்புகளுக்கான சால்க் கல்வி நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் இன்று மருத்துவ, அறிவியல் ஆய்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது. சால்க் தனது இறுதி நாட்களில் எச்.ஐ.விக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zamula E (1991). "A New Challenge for Former Polio Patients." FDA Consumer 25 (5): 21–5. FDA.gov, Cited in இளம்பிள்ளை வாதம்.
  2. Rose DR (2004). "Fact Sheet—Polio Vaccine Field Trial of 1954." March of Dimes Archives. 2004 02 11.
  3. Johnson, George (நவம்பர் 25, 1990). "Once Again, A Man With A Mission". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1990/11/25/magazine/once-again-a-man-with-a-mission.html?pagewanted=all. பார்த்த நாள்: ஆகத்து 5, 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோனாசு_சால்க்&oldid=2890520" இலிருந்து மீள்விக்கப்பட்டது