கொள்ளைநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொள்ளைநோய் (Epidemic) என்பது கொடுக்கப்பட்ட இடத்தில், கொடுக்கப்பட்ட மனித சனத்தொகையில், குறிப்பிட்ட ஒரு நோயானது புதிதாகப் பரவ ஆரம்பிக்கையில், அண்மைய அனுபவங்களின்படி எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறிப் போவதாகும். நோயானது இப்படி திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையில் பரவும்[1]:354[2].

குறிப்பிட்ட நோயானது நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய இடத்தில் மக்களைத் தாக்கும்போது, அது உலகம்பரவுநோய் என அழைக்கப்படும்[1]:55. நிகழ்வு வீதத்துக்கு ஒரு அடிக்கோடு கவனத்தில் கொள்ளப்பட்டு, அந்த அளவைவிட அதிகரிக்கும்போதே அது கொள்ளைநோயாக அறிவிக்கப்படும். தடிமன் போன்ற பொதுவான நோய்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்படுவதில்லை. ஜூன் 11 அன்று உலக சுகாதார அமைப்பு பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்தது.[3]

நோய்க்கான காரணியில் அதிகரிப்பு ஏற்படும்போது இவ்வாறு நிகழலாம். அதற்கான காரணங்கள்[1]:55:

  • நோய்க்காரணியின் வீரியம் அதிகரித்தல்
  • புதிய அமைப்பு சூழலில் அறிமுகமாதல்
  • நோய் வழங்கிகளின் நோயை ஏற்கும் திறன் அதிகரித்தல்
  • நோய் வழங்கியானது நோய்க்காரணிக்கு இலகுவாக வெளிப்படுத்தப்படல்

கொள்ளை நோயானது கட்டாயமாக தொற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.[2][4][5]உடற் பருமன்[5] இவ்வாறு கொள்ளைநோய் என அறிமுகப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Principles of Epidemiology, Second Edition. Atlanta, Georgia: Centers for Disease Control and Prevention இம் மூலத்தில் இருந்து 2011-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110915154853/http://www2a.cdc.gov/phtn/catalog/pdf-file/Epi_Course.pdf. பார்த்த நாள்: 2012-05-31. 
  2. 2.0 2.1 Green MS, Swartz T, Mayshar E, Lev B, Leventhal A, Slater PE, Shemer J (January 2002). "When is an epidemic an epidemic?". Isr. Med. Assoc. J. 4 (1): 3–6. பப்மெட்:11802306 இம் மூலத்தில் இருந்து 2012-07-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120724153251/http://www.ima.org.il/imaj/ar02jan-1.pdf. பார்த்த நாள்: 2012-05-31. 
  3. http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_pandemic_phase6_20090611/en/index.html
  4. Epidemics of Non Infectious Disease
  5. 5.0 5.1 Martin PM, Martin-Granel E (June 2006). "2,500-year evolution of the term epidemic". Emerging Infect. Dis. 12 (6): 976–80. doi:10.3201/eid1206.051263. பப்மெட்:16707055. http://wwwnc.cdc.gov/eid/content/12/6/pdfs/v12-n6.pdf. பார்த்த நாள்: 2012-05-31. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளைநோய்&oldid=3366555" இலிருந்து மீள்விக்கப்பட்டது