உலகம்பரவுநோய்
உலகம்பரவுநோய் (Pandemic) என்பது கொள்ளைநோய் ஒன்று தொற்றுநோயாக இருந்து, அந்த நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய இடத்தில் மக்களைத் தாக்குவதாகும்[1]:55. இது உலகம் முழுமைக்கும்கூட பரவக்கூடும். அதாவது கண்டம், உலகம் போன்ற பெரும் பகுதியில் உள்ள மக்களைத் தாக்கும் கொள்ளை நோய் தொற்றைக் குறிக்கும்.
பெரியம்மை[2], காசநோய்[3][4][5] போன்ற நோய்கள் இவ்வாறு பரவிய நோய்களாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி[6][7], பறவைக் காய்ச்சல்[8], எச்1.என்1 சளிக்காய்ச்சல்[9] போன்றன அண்மையில் பரவிய உலகம்பரவுநோய்கள் ஆகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, "உலகப் பரவற் தொற்று" என்பதற்குப் பின்வரும் நிலைமைகள் தேவை.
- மக்களுக்குப் புதிதான நோய் உருவாதல்.
- கடுமையான நோய் உண்டாக்கும் தொற்று நோய்க்காரணிகள்.
- மனிதர்களிடையே நோய் இலகுவாகப் பரவுதல்.
பரந்த பகுதியில் இருப்பதாலோ, பெருமளவில் மக்கள் கொல்லப்படுவதாலோ மட்டும் ஒரு நோய் உலகம்பரவுநோய் ஆவதில்லை. இது ஒரு தொற்றுநோயாக இருத்தலும் வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமளவில் மக்கள் இறப்பதற்குக் காரணமாகும் புற்றுநோய் உலகம்பரவுநோய் அல்ல.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Principles of Epidemiology, Second Edition. Atlanta, Georgia: Centers for Disease Control and Prevention. http://www2a.cdc.gov/phtn/catalog/pdf-file/Epi_course.pdf.
- ↑ Smallpox and Vaccinia. National Center for Biotechnology Information.
- ↑ Multidrug-Resistant Tuberculosis. Centers for Disease Control and Prevention.
- ↑ World Health Organization (WHO). Tuberculosis Fact sheet N°104 – Global and regional incidence. March 2006, Retrieved on 6 October 2006.
- ↑ Centers for Disease Control. Fact Sheet: Tuberculosis in the United States. 17 March 2005, Retrieved on 6 October 2006.
- ↑ The virus reached the U.S. by way of Haiti, genetic study shows.. Los Angeles Times. October 30, 2007.
- ↑ "The South African Department of Health Study, 2006". Avert.org. பார்த்த நாள் 2010-08-26.
- ↑ MacKenzie D (13 April 2005). "Pandemic-causing 'Asian flu' accidentally released". New Scientist.
- ↑ nature