எயிட்டி
| எயிட்டி Haiti République d'Haïti Repiblik d Ayiti எயிட்டி குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "L'Union Fait La Force" (பிரெஞ்சு) "ஒற்றுமை வலிமையைத் தரும்" |
||||||
| நாட்டுப்பண் La Dessalinienne |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
போர்ட்-ஓ-பிரின்ஸ் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு, ஹையிட்டிய கிரெயோல் | |||||
| மக்கள் | எயிட்டியர் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | ரெனே பிரேவல் | ||||
| - | தலைமை அமைச்சர் | யாரும் இல்லை | ||||
| அமைப்பு | ||||||
| - | செயிண்ட்-டொமிங்கு ஆக | 1697 | ||||
| - | பிரான்சிடம் இருந்து விடுதலை | ஜனவரி 1, 1804 |
||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 27,750 கிமீ² (146வது) 10,714 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.7 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 9,296,000 [1] (85வது) | ||||
| - | 2003 குடிமதிப்பு | 8,527,817 | ||||
| - | அடர்த்தி | 335[1]/கிமீ² (38வது) 758.1/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $14.76 (2006) பில்லியன் (124வது) | ||||
| - | நபர்வரி | $1800 (2006) (153வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2001) | 59.2 (உயர்) | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | கோர்ட் (HTG) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-5) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.-4) | ||||
| இணைய குறி | .ht | |||||
| தொலைபேசி | +509 | |||||
எயிட்டி அல்லது ஹெயிட்டி (Haiti), என்பது கரிபியன் தீவான இஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் எயிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது இஸ்பனியோலா தீவை டொமினிக்கன் குடியரசுடன் பகிர்ந்துள்ளது.
முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான எயிட்டி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது: எயிட்டி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். டூசான் லூவர்சூர் என்ற புரட்சியாளரினால் எயிட்டியப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 இல் இது தனது விடுதலையை அறிவித்தது.
எயிட்டி பாரிய ஆண்டில்லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான இஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 கிமீ எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹையிட்டி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
சனவரி 13,2010 அன்று எயிட்டியில் உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்கானவர் உயிரிழந்தனர்.[2]
பொருளடக்கம் |
மக்கள் [தொகு]
இங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். மீதமானவர்களில் அரபுக்கள், லெபனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவர்.
மதம் [தொகு]
பெரும்பான்மையானோர் (80-85%) ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதுவே இங்கு அதிகாரபூர்வமான மதமாகும். 15-20% மக்கள் புரட்டஸ்தாந்து மதத்தினராவர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "United Nations Population Division". United Nations. பார்த்த நாள் 2007-12-20.
- ↑ 100,000 மக்கள் இறந்ததாக அஞ்சப்படுகிறது
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||