தடுப்பு மருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடுப்பு மருந்து (Vaccine) என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.

இந்தத் தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் நச்சுப்பொருளில் இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் அந்நியப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும் போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். பாக்டீரியா, வைரசு போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன.

தடுப்புமருந்து வகை விளக்கம் உதாரணம்
உயிருள்ள தடுப்பு மருந்து வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி உயிருடன் உடலுள் செலுத்தப்படல் போலியோ சொட்டு மருந்து
உயிரற்ற தடுப்பு மருந்து கொல்லப்பட்ட நுண்ணுயிரி உடலுள் செலுத்தப்படல் டைஃபாயிடு தடுப்பூசி
பகுதிப்பொருள் தடுப்பு மருந்து நுண்ணுயிரியின் ஒருபகுதி செலுத்தப்படல் ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி
நச்சு ஒப்பி (toxoid) தடுப்பூசி செயலிழந்த பாக்டீரிய நச்சு உடலுள் செலுத்தப்படல் டெட்டனசு (T.T) தடுப்பூசி
நோய்எதிர் புரதத் தடுப்பு மருந்து உடனடி பாதுகாப்புக்காக நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் செலுத்தல் டெட்டனசு மற்றும்

வெறிநாய்க்கடி நோய் எதிர் புரதம் (immunoglobulin)

இந்த தடுப்பு மருந்தானது தடுப்பு மருந்தேற்றம் மூலம் உடலினுள் செலுத்தப்படும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடுப்பு_மருந்து&oldid=3711549" இலிருந்து மீள்விக்கப்பட்டது