நுண்ணுயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈ-கோலி எனப் பரவலாக அறியப்படும் ஒரு நுண்ணுயிரின் சிறு குழுமம். 10,000 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒரு மைக்ரோ மீட்டர் அளவை சிறு கோடு காட்டுகிறது

மனிதக் கண்களுக்கு புலப்படாத, நுண்ணோக்கிகளைக் கொண்டு மட்டுமே காண வல்ல உயிரினங்களை நுண்ணுயிர்கள் (Microorganisms) என்கிறோம். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். நுண்ணுயிர்கள் பற்றி ஆராயும் அறிவியல் துறை நுண்ணுயிரியல் ஆகும்.


பொருளடக்கம்

[தொகு] நுண்ணுயிர்களின் அளவு

நுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஒரு கலம் அல்லது உயிரணு மட்டுமே கொண்ட உயிரினங்கள் (கண்ணறை, திசுள் என்னும் பெயர்களும் செல் என்பதைக் குறிக்கும்). எனினும், பல உயிரணுக்கள் கொண்ட உயிரினங்கள் சிலவும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பது உண்டு. கண்ணுக்குப் புலப்படும் அதிநுண்ணுயிரி போன்ற ஒரு கல உயிரினங்களும் உண்டு.

நீரின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிர்களின் வளர்ந்த கூட்டுகள் (colonies) (அகார் மீது வளர்க்கப்பட்டவை)

[தொகு] நுண்ணுயிர்களின் வாழிடம்

கடல், மலை, ஆறு, காடு, பாலைவனம் போன்ற இயற்கையான எல்லா வாழிடங்களிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. பல உயிரினங்களால் உயிர் பிழைக்க இயலாத வெந்நீரூற்றுக்கள், கந்தக பூமிகள், பனிப் பிரதேசங்கள் போன்ற இடங்களிலும், காரத் தன்மை, உப்புத்தன்மை, அமிலத் தன்மை மிகுந்துள்ள இடங்களிலும் கூட நுண்ணுயிர்கள் உயிர் வாழுகின்றன.

[தொகு] நுண்ணுயிர்களின் பயன்பாடுகள்

வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றில் நோய் உண்டாக்கக் கூடிய தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களும் உண்டு.

[தொகு] காட்சியகம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுயிர்&oldid=1110262" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்