அயர்லாந்து குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அயர்லாந்துக் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Éire
அயர்லாந்து குடியரசு
Republic of Ireland
அயர்லாந்தின் கொடி அயர்லாந்தின் சின்னம்
நாட்டுப்பண்
Amhrán na bhFiann  
The Soldier's Song

Location of அயர்லாந்தின்
அமைவிடம்: அயர்லாந்து குடியரசு  (கடும் பச்சை)

– in ஐரோப்பா  (இளம் பச்சை & கடும் சாம்பல்)
– in ஐரோப்பிய ஒன்றியம்  (இளம் பச்சை)

தலைநகரம் டப்ளின்
53°20.65′N 6°16.05′W / 53.34417, -6.2675
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஐரிஷ், ஆங்கிலம்
மக்கள் ஐரிஷ்
அரசு குடியரசு மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி
 -  ஜனாதிபதி மேரி மாக்கலீஸ்
 -  பிரதமர் பிரயன் கொவன்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  அறிவிப்பு ஏப்ரல் 24, 1916 
 -  Ratified ஜனவரி 21, 1919 
 -  அங்கீகாரம் டிசம்பர் 6, 1922 
 -  அரசியலமைப்பு டிசம்பர் 29, 1937 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு ஜனவரி 1 1973
பரப்பளவு
 -  மொத்தம் 70,273 கிமீ² (120வது)
27,133 சது. மை 
 -  நீர் (%) 2.00
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 4,339,000[1] 
 -  2006 குடிமதிப்பு 4,239,848 (121வது)
 -  அடர்த்தி 60.3/கிமீ² (139வது)
147.6/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $177.2 பில்லியன் (49வது)
 -  நபர்வரி $43,600 (2வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $202.9 பில்லியன் (30வது)
 -  நபர்வரி $50,150 (5வது)
ம.வ.சு (2005) Green Arrow Up Darker.svg 0.959 (உயர்) (5வது)
நாணயம் யூரோ (€)¹ (EUR)
நேர வலயம் WET (ஒ.ச.நே.+0)
 -  கோடை (ப.சே.நே.) IST (WEST) (ஒ.ச.நே.+1)
இணைய குறி .ie2
தொலைபேசி +353
1 1999க்கு முன்: ஐரிஷ் பவுன்.
2 .eu தளம் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்படுகின்றது.

அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிச் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.

சமயம்[தொகு]

அயர்லாந்துக் குடியரசில் உள்ள சமயங்கள்
சமயம் விகிதம்
ரோமன் கத்தோலிக்கர்கள்
  
84.2%
சமயம் சாராதவர்கள்
  
6.2%
சீர் திருத்தத் திருச்சபை
  
4.6%
இசுலாமியர்
  
1.1%
ஏனையவர்கள்
  
2.8%
சனத்தொகையின் படி அயர்லாந்துக் குடியரசின் நகரங்கள்

Calatrava-bridge dublin.JPG
டுப்லின் (Dublin)
LimerickCity Riverpoint.jpg
லைம்ரிக் (Limerick)

# நகரம் சனத்தொகை # நகரம் சனத்தொகை

Cork City Hall - Anglesea Street - geograph.org.uk - 1405948.jpg
கோர்க் (Cork)
Galway Harbour 2007.jpg
கல்வே (Galway)

1 டுப்லின் (Dublin) 1,110,627 11 எனிஸ் (Ennis) 25,360
2 கோர்க் (Cork) 198,582 12 கில்க்கெனி (Kilkenny) 24,423
3 லைம்ரிக் (Limerick) 91,454 13 ட்ரலீ (Tralee) 23,693
4 கல்வே (Galway) 76,778 14 கார்லோ (Carlow) 23,030
5 வாட்டர்ஃபொர்ட் (Waterford) 51,519 15 நியூ பிரிஸ் (Newbridge) 21,561
6 ட்ரொக்ஹெடா (Drogheda) 38,578 16 நாஸ் (Naas) 20,713
7 டுண்ட்லக் (Dundalk) 37,816 17 அத்லோன் (Athlone) 20,153
8 ஸ்வோட்ஸ் (Swords) 36,924 18 போர்ட்லயோஸ் (Portlaoise) 20,145
9 பிரே (Bray) 31,872 19 முலின்கர் (Mullingar) 20,103
10 நவன் (Navan) 28,559 20 வெக்ஸ்ஃபோர்ட் (Wexford) 20,072


நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

Ireland Administrative Counties.1.png
  1. ஃவிங்கல் (Fingal)
  2. டுப்லின் (Dublin)
  3. டுன் லயோக்கைரெ-ரத்டவுன் (Dún Laoghaire–Rathdown)
  4. தென் டுப்லின் (South Dublin)
  5. விக்லோ (Wicklow)
  6. வெக்ஸ்ஃபோர்ட் (Wexford)
  7. கார்லோ (Carlow)
  8. கில்டேர் (Kildare)
  9. மெத் (Meath)
  10. லூத் (Louth)
  11. மொனாக்கான் (Monaghan)
  12. கவன் (Cavan)
  13. லோங்ஃபோர்ட் (Longford)
  14. வெஸ்ட்மெத் (Westmeath)
  15. ஒஃவ்வலி (Offaly)
  16. லஒசிச் (Laois)
  17. கில்க்கெனி (Kilkenny)
  1. வாட்டர்ஃபோர்ட் நகரம்(Waterford City)
  2. வாட்டர்ஃபோர்ட் (Waterford)
  3. கோர்க் நகரம் (Cork City)
  4. கோர்க் (Cork)
  5. கெர்ரி (Kerry)
  6. லைம்ரிக் (Limerick)
  7. லைம்ரிக் நகரம் (Limerick City)
  8. தென் திப்பெரரி (South Tipperary)
  9. வட திப்பெரரி (North Tipperary)
  10. க்ளரெ (Clare)
  11. கல்வே (Galway)
  12. கல்வே நகரம் (Galway City)
  13. மயோ (Mayo)
  14. ரொஸ்கொமன் (Roscommon)
  15. சில்கொ (Sligo)
  16. லெய்ட்ரிம் (Leitrim)
  17. டன்கல் (Donegal)


புவியியல்[தொகு]

அயர்லாந்தின் பரப்பளவு 70,273 km2 அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரிஷ் கடல் அமைந்துள்ளது.

வெளிநாட்டு உறவு[தொகு]

அயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அயர்லாந்து_குடியரசு&oldid=1638504" இருந்து மீள்விக்கப்பட்டது