முளைத்தல்
முளைத்தல் என்பது ஒரு தாவரம் அல்லது பூஞ்சையின் விதை (seed) அல்லது வித்து (spore) வளரத் தொடங்கும் செயலாகும். விதை அல்லது வித்திலிருந்து முளைவிட்டு வளர ஆரம்பிக்கும் இளம் தாவரமானது நாற்று அல்லது கன்று என அழைக்கப்படும். பூக்கும் தாவரம் (angiosperm), வித்துமூடியிலி (gymnosperm) வகைத் தாவரங்களிலேயே பொதுவாக அவற்றின் விதையிலிருந்து முளைத்தல் செயல் முறைமூலம் புதிய தாவரமான நாற்று உருவாகும். ஆனாலும் பூஞ்சைகளில், அவற்றின் வித்துக்களில் இருந்து காளான் இழை அல்லது பூஞ்சை இழை (Hyphae) வளர ஆரம்பிக்கும் செயலும் முளைத்தல் என்று அழைக்கப்படுகிறது. பொது வழக்கில், கரு ஒன்றிலிருந்து புதிதாக ஒரு தாவரம் வளர ஆரம்பிக்கும் நிலையை கூறலாம்.
பொருளடக்கம் |
[தொகு] முளைத்தலின் வகைகள்
- தரை மேல் முளைத்தல்: இருவித்திலைத் தாவரங்களில் முளைத்தண்டு தரைக்கு வெளியே இழுக்கப்படுவதுடன் நடைபெறும் முளைத்தல் தரை மேல் முளைத்தல் ஆகும்.
- தரைக்கீழ் முளைத்தல்: ஒரு வித்திலைத் தாவரங்களில் தரைக்குக் கீழாக முளைத்தல் நடைபெற்று முளைத்தண்டு தரையைக் கிழித்த வெளிவரும். இது தரைக் கீழ் முளைத்தல் ஆகும்.
[தொகு] வித்து முளைப்பதற்குத் தேவையான நிபந்தனைகள்
வித்து முளைப்பதற்கு நீர், ஆக்சிசன், தகுந்த வெப்பநிலை, சிலவேளைகளில் ஒளி அல்லது இருள் என்பன தேவையான நிபந்தனைகளாகும்.[1]வெவ்வேறு தாவரங்களில் இந் நிபந்தனைகளின் தேவை வேறுபட்டதாயிருக்கும். அந்த வேறுபாடு வித்தின் தன்மை, தாவரத்தின் இயற்கை வாழ்விடத்தின் சூழலியல் காரணிகள் போன்றவற்றில் தங்கியிருக்கும்.
சில வித்துக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு வித்து உறங்குநிலையில் இருந்துவிட்டு, பின்னர் தகுந்த சூழல்நிலைகள் கிடைத்த பின்னரே முளைக்கும்.
[தொகு] படங்கள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Raven, Peter H.; Ray F. Evert, Susan E. Eichhorn (2005). Biology of Plants, 7th Edition. New York: W.H. Freeman and Company Publishers. pp. 504–508. ISBN 0-7167-1007-2.