உடற்கூற்றியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடற்கூற்றியல் (Anatomy) என்பது உயிரியல், மருத்துவம் ஆகியவற்றின் ஒரு துறையாகும். இது உயிரினங்களின் உடலின் அமைப்புப் பற்றிய அறிவைத் தருவதாகும். உடலின் பகுதிகள் (கூறுகள்) அல்லது உடல் உறுப்புக்கள் பற்றி கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ அல்லது நுணுக்குக்காட்டியில் பார்க்கும் வகையிலோ ஆய்வுக்கு உட்பட்ட கல்வியாகும்.
இதனைத் தாவர உடற்கூற்றியல், விலங்கு உடற்கூற்றியல் என இரண்டாக வகைப்படுத்தலாம். விலங்கு அல்லது மனித உடற்கூற்றியலில் உடலைப் பாகங்கள் வாரியாக (எ. கா: தலை, நெஞ்சு) அல்லது தொழிற்பாடு வாரியாக (எ.கா: நரம்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி) கற்கலாம்.
[தொகு] இந்த படிப்பை வழங்கும் சில இந்திய கல்வி நிறுவனங்கள்
- சென்னை பல்கலைக்கழகம், சென்னை
- சவிதா மருத்துவக் கல்லூரி, சென்னை
- எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி , சென்னை
- அமிர்தா மருத்துவக் கல்விநிறுவனம், கொச்சி
- மணிப்பால் பல்கலைக்கழகம், மணிப்பால்
- கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி, கேரளா