பல் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல் மருத்துவர் ஒருவரும் அவரது உதவியாளரும் ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்கின்றனர்.

பல்மருத்துவம் என்பது, வாய்க்குழி, முகஎலும்புப் பகுதி, அருகிலுள்ள தொடர்புள்ள அமைப்புக்கள் என்பவை சார்ந்த நோய்கள், ஒழுங்கின்மை, அவற்றின் நிலை என்பவற்றையும், மனித உடலில் அவற்றின் தாக்கத்தையும் மதிப்பிடுவதையும், நோயறிதலையும், தடுத்தலையும், குணப்படுத்தலையும் குறிக்கும். பல்மருத்துவத் தொழிலை மேற்கொண்டு உள்ளவர்கள் பல்மருத்துவர் எனப்படுவர்.

அறுவை மருத்துவம்[தொகு]

பல்மருத்துவம், வாய்க்குழி தொடர்பாகப் பல செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது. பொதுவான மருத்துவ முறைகள் பற்சொத்தைக்கான சிகிச்சையாகப் பற்கள் மீதான அறுவை மருத்துவத்தை உள்ளடக்குகிறது. சிதைவடைந்த பற்கள், பல் உலோகப்பூச்சு, பல் கூட்டுப்பொருள், பல் போசலின் என்பவற்றுள் ஒன்றால் நிரப்பப்படுகின்றன. வாய் மற்றும் முகஎலும்பு அறுவை மருத்துவம் பல் அறுவை மருத்துவத்தின் சிறப்பு வடிவமாகும். பல் மருத்துவர்கள் மருந்துகள், எக்ஸ்-கதிர்ச் சிகிச்சை போன்றவற்றை நோயாளருக்குக் கொடுக்க முடியும். பல பல் நோய்களும் வழக்கத்துக்கு மாறான தன்மைகளும், பிற தொகுதிகள், நரம்பு போன்றவற்றில் இருக்கக்கூடிய நோய்களைக் குறிப்பனவாகவும் இருக்கக்கூடும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பல்_மருத்துவம்&oldid=1594421" இருந்து மீள்விக்கப்பட்டது