கதிர் மருத்துவம்
கதிர் மருத்துவம் (ஆங்கிலம் : Radiation therapy) என்பது புற்றுநோய் மருத்துவ முறையாகும். எக்சு-கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. புற்றுநோய் கட்டியில் உள்ள உயிரணுக்களை கட்டுப்படுத்துவதால் இப்பண்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். மேலும் இது அறுவை மருத்துவம் நடக்கும் போதே, முற்றும் அகற்றப்படாத புற்று அணுக்களுக்கு கதிர்வீச்சின் மூலம் மருத்துவம் மேற்கொள்ளும் முறையென்றும் கூறலாம்.
பொருளடக்கம் |
வகைகள் [தொகு]
அறுவைக்கு முன் [தொகு]
அறுவைககு முன் கதிர்மருத்துவம் (Preoperative RT ) என்பது சில சிக்கலான அறுவை மருத்துவத்தின் போது , புற்றுநோய் பெரிதாக இருப்பதாலோ அல்லது புற்று நோய்கண்ட திசுக்களை மிக அடுத்து முக்கியமான உறுப்புகள் இருப்பதாலோ அறுவை சிகிச்சை மேற்கொள்வது கடினமாக உள்ளது. இந்நிலையினை எளிதாக்க அறுவைக்கு முன் கதிர் வீச்சின் மூலம் புற்றின் பருமனளவை சிறிதாக்க அல்லது குறைக்க முடியும். புற்றின் பருமனளவு குறைந்த நிலையில் அறுவை மருத்துவர்களால் எளிதாக புற்றினை அகற்றமுடியும். இதுவே அறுவை மருத்துவத்திற்கு முன் கதிர் மருத்துவம் எனப்படுகிறது.[1][2]
அறுவைக்குப் பின் [தொகு]
அறுவை மருத்துவத்திற்கு பின் கதிர் மருத்துவம்(Postoperative RT) என்பது புற்று நோயினை அறுவை மூலம்அகற்றிய பின்னும் மருத்துவர் சில புற்று அணுக்கள் அகற்றப்படாமல் இருக்கக் கூடும் என்று சந்தேகப்படும் போது ,அவ்வணுக்களை முற்றிலும் அழிக்க ,அறுவைக்குப் பின் அந்த இடத்தில் கதிர் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் விடுபட்ட சில புற்று அணுக்களும் அகற்றப் படுகின்றன.இம்முறையே அறுவைக்கு பின் கதிர்மருத்துவம் எனப்படுகிறது.[3][4][5]
மேற்கோள்கள் [தொகு]