பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதப் பற்கள்

பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கவும் தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன. பல் வேர்கள் முரசினால் மூடப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இருமுறை பற்கள் முளைக்கின்றன. பாற்பற்கள் (பால் பற்கள்) ஆறு மாதத்தில் முளைக்கத் தொடங்குகின்றன. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு. சுறாக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதிய பற்கள் முளைக்கின்றன.

பல் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பற்கள் கால்சியம் தாதுவால் ஆனவை.

[தொகு] வகைப்பாடு

பற்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவையாவன

வெட்டுப் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் பண்டங்களை கடிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருளி மேல்) கோடரியால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.

கோரைப் பற்கள் வாயின் இரு பக்கங்களிலும்,வெட்டுப் பற்களை அடுத்து, உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை கிழிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருளி மேல்)ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.

கடவாய்ப் பற்கள் வாயின் பின் பக்கத்தில்,கோரைப் பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை நொறுக்க உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.

[தொகு] வெளி இணைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D&oldid=1024588" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்