அண்ணீரகச் சுரப்பி
| அண்ணீரகச் சுரப்பி | |
|---|---|
| அகச்சுரப்பித் தொகுதி | |
| அதிரெனல் சுரப்பி | |
| இலத்தீன் | glandula suprarenalis |
| கிரேயின் | |
| தொகுதி | அகச்சுரப்பி |
| தமனி | அண்ணீரக மேல்தமனி, அண்ணீரக நடுத்தமனி, அண்ணீரகக் கீழ்த்தமனி |
| சிரை | அண்ணீரகச் சிரைகள் |
| நரம்பு | celiac plexus, renal plexus |
| நிணநீர் | கீழ்முதுகுச் சுரப்பிகள் |
| ம.பா.தலைப்பு | Adrenal+Glands |
| Dorlands/Elsevier | g_06/12392729 |
அண்ணீரகச் சுரப்பி (தமிழக வழக்கு: அட்ரீனல் சுரப்பி) என்பது, சிறுநீரகத்தின் மேல் இருக்கும் முக்கோண வடிவான அகச்சுரப்பி ஆகும். இது நாளமில்லாச் சுரப்பி ஆகும். இவை ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் மேற்புரத்தில் ஒன்று வீதம் இருபுறமும் அமைந்திருக்கும். இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. உட்புறப்பகுதிக்கு அகணி என்று பெயர். வெளிப்புறப் பகுதிக்கு புறணி என்பது பெயர். இச்சுரப்பியின் எடை 12 கிராம்களாகும். அட்ரீனல் அகணியிலிருந்து அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் என்ற இருவகை இயக்கு நீர்கள் சுரக்கின்றன. புறணியிலிருந்து 'ஸ்டீராய்ட்ஸ்' (Steroids) என்னும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இவற்றின் முக்கியப் பணி திசுக்களைத் தூண்டுவதும், உடம்பின் வளர்ச்சிதை மாற்றத்தைச் சீராக நடைபெறச் செய்வதும் ஆகும், இச்சுரப்பியிலிருந்து ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெச்ட்ரான் ஹார்மோன்களும் மிகச் சிறிய அளவில் சுரக்கின்றன. கார்ட்டிசால், அதிரனலீன் ஆகியவற்றை உள்ளடக்கிய கார்ட்டிகோஸ்டெரோய்டுகள், கட்டெகோலமைன்கள் என்பவற்றை உற்பத்தி செய்வதன்மூலம், நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளை நெறிப்படுத்துவதே இதன் முக்கிய பொறுப்பு ஆகும்.
