ஈத்திரோசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈஸ்திரியோல். வலது மூலையிலுள்ள "டி" வளையத்துடன் இரண்டு ஐட்டிராக்சில் (-OH) தொகுதிகள் இருப்பதைக் கவனிக்கவும்
ஈஸ்திரடையோல். வலது மூலையிலுள்ள "டி" வளையத்துடன் ஒற்றை ஐட்டிராக்சில் (-OH) தொகுதி இருப்பதைக் கவனிக்கவும். பெயரிலுள்ள 'டை' என்பது இந்த ஐட்டிராக்சில் தொகுதியையும், இடது மூலையிலுள்ள "எ" வளையத்துடன் உள்ள ஒற்றை ஐட்டிராக்சில் தொகுதியையும் சேர்த்துக் குறிக்கின்றது
ஈஸ்திரோன். வலது மூலையிலுள்ள "டி" வளையத்துடன் கீட்டோன் (=O) தொகுதி இருப்பதைக் கவனிக்கவும்

ஈத்திரோசன் (Estrogen) அல்லது ஈஸ்ட்ரோசன் என்பது ஓர் பெண் பாலின இயக்குநீர் ஆகும். இது பெண்களின் பூப்புக் கால வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. மாதவிடாய் காலங்களில் முக்கியப் பங்காற்றுகின்றது. மாதவிடாய் நின்றபிறகு, ஈத்திரோசன் அளவுகள் குறைகின்றன. இதனையொத்த ஆண் பாலின இயக்குநீர் இசுடெசுத்தோசத்தெரோன் ஆகும்.

ஈத்திரோசன் அனைத்து முதுகெலும்பிகளிலும்[1] சில பூச்சிகளிலும் இணைத்துருவாக்கப்படுகின்றது.[2] இவை இரண்டிலும் ஈத்திரோசன் இருப்பதைக் காண்கையில் ஈத்திரோசன் பாலின இயக்குநீர்கள் கூர்ப்பின் தொன்மையான காலந்தொட்டே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Ryan KJ (August 1982). "Biochemistry of aromatase: significance to female reproductive physiology". Cancer Res. 42 (8 Suppl): 3342s–3344s. பப்மெட் 7083198. 
  2. Mechoulam R, Brueggemeier RW, Denlinger DL (September 2025). "Estrogens in insects". Cellular and Molecular Life Sciences 40 (9): 942–944. doi:10.1007/BF01946450. http://www.springerlink.com/content/tr77034552r222m1/fulltext.pdf. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்திரோசன்&oldid=1676995" இருந்து மீள்விக்கப்பட்டது