சிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிரையின் குறுக்குவெட்டுத் தோற்றம்(நீல அம்புக்குறி குருதியோடும் திசையையும் மஞ்சள் நிறப் பட்டைகள் வால்வினையும் குறிக்கின்றன.)

இரத்த ஓட்ட மண்டலத்தில் இதயத்தை நோக்கி இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் சிரைகள் (Veins) அல்லது நாளங்கள் எனப்படுகின்றன. இரத்தத்தை இதயத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் (Arteries) எனப்படுகின்றன.

செயற்பாடு[தொகு]

சிரைகள் இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தமானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த இரத்தம் சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

நுரையீரல் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது மேலறைக்கு கொண்டு செல்கின்றன. பின் இது இடது கீழறைக்கும் அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்த இரத்த ஓட்டச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிரை&oldid=1472646" இருந்து மீள்விக்கப்பட்டது