மூச்சுத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுவாசத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித மூச்சியக்கத் (சுவாசத்) தொகுதியின் அமைப்பு.

உயிரினங்களில், மூச்சுத் தொகுதி அல்லது மூச்சியக்கத் தொகுதி அல்லது சுவாசத் தொகுதி (respiratory system) என்பது உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான வளிமங்களை உள்ளிளுத்து, வளிமப் பரிமாற்றத்திற்கு உதவி, தேவையற்ற வளிமத்தை வெளியேற்றும் பணியைச் செய்யும் ஒரு உடற்கூற்றியல் தொகுதியாகும். பயன்படும் வளிமங்கள், தொகுதியின் உடற்கூறு அல்லது அமைப்பு, வழங்கப்படும் வளிமங்களின் பயன்பாடு என்பன உயிரினங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. மனிதர்களிலும், பிற பாலூட்டிகளிலும் மூச்சுத் தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக மூச்சுக் குழாய்கள், நுரையீரல், மூச்சியக்கத் தசைநார்கள் என்பன காணப்படுகின்றன. ஆக்சிசன் மூலக்கூறுகளும், காபனீரொட்சைட்டு மூலக்கூறுகளும் பரவல் மூலம், வெளிச் சூழலுக்கும், குருதிக்கும் இடையே மாற்றீடு செய்துகொள்ளப் படுகின்றன. இம் மாற்றீடு நுரையீரலின் நுண்குழியப் பகுதியில் நடைபெறுகின்றது.

பூச்சிகள் போன்ற உயிரினங்களில் மூச்சுத் தொகுதி மிகவும் எளிமையான உடற்கூற்றியல் அமைப்பைக் கொண்டனவாக உள்ளன. ஈரூடகவாழிகளில், அவற்றின் தோலும் கூட வளிம மாற்றீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாவரங்களிலும் மூச்சியக்கத் தொகுதி உள்ளது ஆயினும், இவற்றில் வளிம மாற்றீடு எதிர்த் திசையில் அமைந்துள்ளது. தாவரங்களின் மூச்சுத் தொகுதியின் முக்கியமான உடற்கூற்று அம்சமாக இலைகளின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள நுண்துளைகள் உள்ளன.

மேலும் பார்க்க [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மூச்சுத்_தொகுதி&oldid=1351680" இருந்து மீள்விக்கப்பட்டது