அகச்சுரப்பித் தொகுதி
அகச்சுரப்பித் தொகுதி என்பது வளரூக்கிகள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, வளர்சிதைமாற்றம், வளர்ச்சி, திசுக்களின் செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை அகச்சுரப்பியியல் எனப்படுகின்றது.
அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதிக் கலங்களில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப் பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.
[தொகு] சைகைகளின் வகைகள்
கலச் சைகையின் பொதுவான முறை அகச்சுரப்புச் சைகை ஆகும். இத்துடன், பராகிறைன், ஆட்டோகிறைன், நியூரோஎண்டோகிறைன் ஆகிய வேறு பல சைகை முறைகளும் உள்ளன. நுரோன்களுக்கு இடையிலான தனி நியூரோகிறைன் சைகை முறை நரம்புத் தொகுதிக்கு உரியது ஆகும்.