குருத்தெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கசியிழையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Cartilage
Hypertrophic Zone of Epiphyseal Plate.jpg
Hyaline cartilage showing chondrocytes and organelles, lacunae and matrix
தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழலின் அருகே உள்ள தைராய்டு என்னும் தொண்டைச் சுரப்பிக் குருத்தெலும்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது.

குருத்தெலும்பு அல்லது கசியிழையம் (cartilage) என்பது மனிதர், வேறு விலங்குகளின் உடலின் பல பகுதிகளிலும் காணப்படும், நெகிழ்வுத்தன்மை கொண்ட, வளையக்கூடிய ஒரு இணைப்பிழையம் ஆகும். இது மென்மையான எலும்பு போன்று இருக்கும். இது ஒரு வகை புரத நார்களாலும், வளைந்தால் மீண்டும் தன் நிலையைப் பெறும் மீண்ம நார்களாலும் (elastin) ஆன அடர்த்தியான இணைப்பிழையம் ஆகும். இது சவ்வு இழை மற்றும் வேறு பொருட்களினால் ஆனது. இவை அனைத்தும் திசுக்கூழ் அல்லது தாயம் எனப்படும் பாகுத் தன்மை கொண்ட பொருளில் அடக்கப்பட்டிருக்கும். குருத்தெலும்புக்குள் குருதிக் குழாய்கள் ஏதும் இருப்பதில்லை. இவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், திசுக்கூழ் ஊடாக அடர்த்தி வேறுபாடால் பரவல் முறையில் உறிஞ்சப்படுகின்றன. திசுக்கூழ் பல செயற்பாடுகளைக் கொண்டது. எலும்பின் இயக்கத்துக்கு வேண்டிய மழமழப்பான மேற்பரப்பை வழங்குவதும், எலும்புப் படிவுக்கான சட்டகமாகத் தொழிற்படுவதும் இவற்றுள் அடங்கும்.

சுறா மீனின் உடல் முழுவதிலும் உள்ள எலும்பு இவ்வகை குருத்தெலும்பால் ஆனது. மனிதர்களின் உடலில் பல இடங்களில் குருத்தெலும்பு உள்ளது. எடுத்துக்காட்டாக தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழாயைச் சூழ்ந்திருக்கும் தைராய்டு குருத்தெலும்பு (Thyroid cartilage) என்னும் தொண்டைச்சுரப்பி குருத்தெலும்பு அவற்றில் ஒன்றாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குருத்தெலும்பு&oldid=1654573" இருந்து மீள்விக்கப்பட்டது