காழ்
|
இந்தக் கட்டுரையில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது.. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை பல நாட்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். |
கலன் தாவரங்களில் காணப்படும் கொண்டுசெல்லல் இழையங்களில் காழும் ஒன்றாகும். மற்றது உரியம் எனப்படும். காழ் இழையம் நீர், கனியுப்பு என்பவற்றைக் கடத்தும்.
கட்டமைப்பு [தொகு]
காழ் இழையம் அதன் கட்டமைப்பில் நான்குவகையான கலங்களைக் கொண்டிருக்கும்.
- காழ்க்கலன் மூலகம்
- காழ்க் குழற்போலி
- காழ்நார்
- காழ்ப் புடைக்கல இழையம்
காழ்க்கலன் நீர், கனியுப்பு என்பவற்றைக் கடத்தும் முக்கிய பாகமாகக் காணப்படும். நீண்ட உருளை வடிவில் காணப்படும். குழல்போலி மூலகம் துளைகளைக் கொண்டதாகக் காணப்படும். குழல்போலி மூலகங்களின் இடைச் சுவர் அழிவடைவதன் காரணமாக நீண்ட குழற்போலி உருவாகும்[2]
காழ்ப் புடைக்கல இழையம் காழில் காணப்படும் மற்றொரு கலமாகும்.[3]
- மெல்லிய தண்டுள்ள தாவரங்களிலும் தாவரத்தின் இளந்தண்டுகளிலும் காழ் கலன்கட்டுகளில் காணப்படும்.
- இரண்டாம் நிலை காழ்கள் வளர்தண்டுகளில் கலன்மாறிழையங்களில் காணப்படும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Winterborne J, 2005. Hydroponics - Indoor Horticulture
- ↑ Peter A. Raven, Ray F. Evert, Susan E. Eichhorn (1999). Biology of Plants. W.H. Freeman and Company. pp. 576–577. ISBN 1-57259-611-2.
- ↑ Encyclopædia Britannica