குருதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

.

மனிதனின் குருதி, உருப்பெருக்கம் x 600
தவளையின் குருதி, உருப்பெருக்கம் x 600
மீனின் குருதி, உருப்பெருக்கம் x 600

குருதி என்பது விலங்கினங்களின், உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு உடல் திரவம் (blood fluid) ஆகும். குருதியானது தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் எனப்படும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக குருதிச் சுற்றோட்டத்தொகுதி என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள். தமிழில் குருதியை அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர் என்ற பிறபெயர்களாலும் அழைப்பர்.

குருதியானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொக்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.

குருதி என்பது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதி நுண் திப்பிகள் கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, நுண் திப்பிகள் (தட்டுகள்) 1%.

மாந்தனின் உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் குருதிப்பெருக்கினால் குருதியிழப்பு ஏற்படும். இது பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் குருதியின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும்.

குருதி செப்பமுற இயங்க வேறு பல உறுப்புகளும் துணைபுரிகின்றன. குருதி ஆக்சிசனை நுரையீரல் வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பனீரொக்சைட்டு வளிமத்தை நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது.

பொருளடக்கம்

[தொகு] குருதியின் கூறுகள்

[தொகு] குருதியில் உள்ள குருதி நீர்மம் (blood plasma)

குருதி நீர்மம் என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், நுண்ணிய திப்பிகளும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன. குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனதெனினும், நூற்றுக்கணக்கான வேறு பொருட்களும் உள்ளன. அவற்றுள் பல்வேறு புரதப்பொருள்கள் (proteins), உடல் செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், உப்புபோன்ற தாதுபொருட்கள் சிலவாகும்.

குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் ஆல்புமின் (albumin, வெண்ணி (புரதம்)), நாரீனி (புரதம்) (fibrinogen), குளோபுலின் (globulin), நுண்குளியம் (புரதம்), என்பவை சில. ஆல்புமின் (வெண்ணி (புரதம்)) என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து கசிந்து வெளியேறிப் பக்கத்து திசுக்களுக்குச் சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். நாரீனி என்னும் புரதம் இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகி குருதி உறைந்து வெளிப்படாமல் தடுக்க இயலுகின்றது. இந்த நாரினி இல்லையெனில் புண்ணில் இருந்து குருதி வெளியேறுவது நில்லாது. நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது நோய் தொற்றுவதைத் தடுப்பது.

[தொகு] குருதியிலுள்ள குருதி உயிரணுக்கள்

அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி ஒன்றின் ஊடாகத் தெரியும், இடமிருந்து வலம், சாதாரண செங்குருதியணு, குருதிச் சிறுதட்டு, வெண்குருதியணு ஆகியவற்றின் தோற்றம்

குருதியிலுள்ள திண்ம நிலையில் காணப்படும் உயிரணுக்களாகும். இவற்றில் செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் என்பன காணப்படுகின்றன. குருதிக்குச் செந்நிறம் தருவது செங்குருதியணுக்கள். ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு). வெண்குருதியணுக்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும். குருதிச் சிறுதட்டுக்கள் குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும்.

[தொகு] மனிதனல்லாத முதுகெலும்பிகளில் குருதி

அனைத்து பாலூட்டிகளினதும் குருதியின் பொதுவான மாதிரியை ஒத்தே மனித குருதி இருக்கின்றது. இருப்பினும் உயிரணுக்களின் எண்ணிக்கை, அளவு, புரதத்தின் வடிவம் போன்றவற்றின் துல்லியமான விபரங்களில் வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. இனக்களிடையே வேறுபாடு இருக்கின்றது. பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளின் குருதியில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன[1].

  • பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளில் உள்ள செங்குருதியணுக்கள் தமது கருவைத் தக்கவைத்துக் கொள்வனவாகவும், தட்டையாகவும், முட்டையுருவிலும் இருக்கும்.
  • பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளின் வெண்குருதியணுக்களில் உள்ள உயிரணுக்களின் வகையும், விகிதமும் மனிதரில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபாட்டைக் கொண்டிருக்கு. முக்கியமாக மனிதரின் குருதியில் உள்ளதை விட அமிலநாடிகள் அதிகளவில் இருக்கும்.
  • பாலூட்டிகளில் உள்ள குருதிச் சிறுதட்டுக்கள் தனித்தன்மை கொண்டவை. ஏனைய முதுகெலும்பிகளில் குருதி உறைதலுக்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சிறியவையாகவும், கருவைக் கொண்டவையாகவும், கதிர் போன்ற அமைப்பைக் கொண்டவையாகவும் இருக்கும்.

[தொகு] உடற்றொழிலியல்

[தொகு] இதயக்குழலியத் தொகுதி

[தொகு] குருதி உயிரணுக்களின் உருவாக்கமும், அழிவும்

[தொகு] ஆக்சிசன் கடத்தல்

[தொகு] காபனீரொக்சைட்டு கடத்தல்

[தொகு] ஐதரசன் அயனிகள் கடத்தல்

[தொகு] நிணநீர்த் தொகுதி

[தொகு] உடல்வெப்ப சீராக்கம்

[தொகு] நீரியல் தொழிற்பாடுகள்

[தொகு] முதுகெலும்பிலிகள்

[தொகு] குருதியின் வகைகள்

குருதியில் பல வகைகள் உள்ளன. அவையாவன:

  • A
  • B
  • AB
  • O
  • Duffy
  • Lutheran
  • Bombay
  • MN system

[தொகு] குருதியின் தொழில்கள்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. pp. 404–406. ISBN 0-03-910284-X. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=குருதி&oldid=1061277" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்