நுண்நோக்கி
| பயன்பாடு | நுண்ணிய பொருட்கள் ஆராய்வு |
|---|---|
|
குறிப்பிடத்தக்க ஆய்வுகள்
|
உயிரணுக்கள் கண்டுபிடிப்பு |
| கண்டுபிடித்தவர் | கான்சு ஜேன்சென்(Hans Janssen) சக்கரியாசு ஜேன்சென்(Zacharias Janssen) |
| தொடர்புடைய கருவிகள் | ஒளி நுண்நோக்கி இலத்திரன் நுண்நோக்கி |
நுண்நோக்கி (இலங்கை வழக்கு - நுணுக்குக்காட்டி) (Microscope) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும்.
1. கட்துண்டு - ocular lens or eye-piece
2. சுழலும் மூக்குத் துண்டு - objective turret, or nosepiece
3. பொருட்துண்டு - objective lenses
4. பொருஞ்சீராக்கி - coarse adjustment knob
5. நுண்சீராக்கி - fine adjustment knob
6. மேடை - object holder or stage
7. ஆடி - mirror
8. ஒடுக்கி - diaphragm and condenser
பலவிதமான நுண்நோக்கிகள் பயன்பாட்டில் உள்ளன, இவற்றுள் பொதுவானதும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதுமான ஒளிநுண்நோக்கியில் ஒளியின் உதவியுடன் பிம்பம் நோக்கப்படுகின்றது. பொதுவாக, நுண்நோக்கி எனும்போது ஒளி நுண்நோக்கியையே குறிக்கின்றது. ஒளி நுண்நோக்கியின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட மிகவும் நுண்ணிய பொருட்களை நோக்க இலத்திரன் நுண்நோக்கி, வருடு நுண்சலாகை நோக்கி (scanning probe microscopes) பயன்படுகின்றது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
1590ம் ஆண்டு நெதர்லாந்தில் கான்சு ஜேன்சென்(Hans Janssen) மற்றும் அவரது மகன் சக்கரியாசு ஜேன்சென்(Zacharias Janssen) ஆகிய மூக்குக்கண்ணாடி தயாரிப்போர் முதல் கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்கள். [1] [2] கலிலியோ கலிலி (Galileo Galilei 1564-1642) 1609 – 1624ம் ஆண்டுப் பகுதிகளில் குழிவு, குவிவு வில்லைகளைப் பயன்படுத்தி கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கி, பூச்சிகளின் கூட்டுக்கண்களை ஆராய்ந்தார். 1625இல் “microscope” (நுண்ணோக்கி) என்னும் பெயரை ஜெர்மானிய மருத்துவரான கியோவான்னி ஃபாபெர் (Giovanni Faber) என்பவர் இட்டார். மார்செலோ மல்பிஜி (Marcello Malpighi, 1628-1694) எனும் இத்தாலிய உடற்கூற்றியல், இழையவியல் ஆராய்ச்சியாளர் நுண்ணோக்கியை உபயோகப்படுத்தி விலங்குகளின் இழைய அமைப்புக்களை ஆராய்ச்சி செய்தார், சில உள்ளுறுப்புக்களின் இழைய அமைப்பு இவரது பெயரால் அழைக்கப்படுகின்றது (தோலில் உள்ள மல்பிஜியின் படை). ரொபட் கூக் (Robert Hooke, 1635 – 1703) எனும் ஆங்கிலேய நுண்ணோக்கி ஆராய்ச்சியாளர் 1665 - 1667இல் தான் உருவாக்கிய கூட்டு நுண்ணோக்கியால் தக்கைக்கலங்களின் மெல்லிய பகுதியினை ஆராய்ந்தார், இவற்றில் நோக்கிய தேன்கூடு போன்ற சிறுசிறு பகுதிகளுக்கு “cell” (கண்ணறை) என்று பெயரிட்டார், இவ்வார்த்தையே இன்று ஆங்கிலத்தில் செல் என்று உயிரணுக்களை அழைக்கப்பயன்படுகின்றது. அன்டன் வான் லீவன்கோக் (Anton van Leeuwenhoek, 1632-1723) நுண்ணோக்கியின் தரத்தை உயர்த்தி அதனது உருப்பெருக்கத்தையும் உயர்த்தினார்; தனி உயிரணுக்களை விரிவாக ஆராய்ந்தார்; இவரே முதன் முதலில் பாக்டீரியாக்கள் பற்றி ஆராய்ந்தவரும் ஆவார்.
Microscope Gallery [தொகு]
Mechanical part of microscope [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- ↑ "Dutchmen Hans and Zacharias Jansenn: Early Microscopists". பார்த்த நாள் 27 April 2011.
- ↑ "Zacharias Janssen". பார்த்த நாள் April 27, 2011.