உயிரினங்களின் தோற்றம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
On the Origin of Species
உயிரினங்களின் தோற்றம்
Origin of Species title page.jpg
On the Origin of Species
நூலின் 1859 ஆம் ஆண்டு பதிப்பின் அட்டை
நூலாசிரியர் (கள்) சார்ல்ஸ் டார்வின்
நாடு ஐக்கிய இராச்சியம்
மொழி ஆங்கிலம்
துறை (கள்) Natural selection
Evolutionary biology
பதிப்பாளர் ஜான் மறி
பதிப்புத் திகதி
ஐஸ்பிஎன் சுட்டெண் தரப்படவில்லை

உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) ஆங்கில உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வின் அவர்களால் 1859 ம் ஆண்டு படிவளர்ச்சிக் கொள்கையை விபரித்து வெளியிடப்பட்ட நூல் ஆகும். உலகின் அறிவியல் நூல்களில் மிக முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது. இந்த நூல் படிவளர்ச்சிக் கொள்கையை ஆதாரங்களுடன் விளக்குகிறது. அன்றுவரை உயிர்களின் தோற்றதைப் பற்றி சமயத் தொன்மங்களே கருத்துக் கூறின. இந்த நூலின் இயற்கையான விளக்கம் உயிரியல் மரபியல் புரட்சிக்கு வித்திட்டு, உலகை மாற்றியமைத்தது.