பாசிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லௌரென்சியா (Laurencia) கடல்பாசியின் (seaweed) தோற்றம்: கிளைகள் பல திசுள் அமைப்புடையதாகவும் 1 மி.மி தடிமனுள்ளதாகவும் உள்ளன. இன்னும் சிறிய பாசிகள், இந்தக் கிளைகளுடன் ஒட்டியிருப்பதை படத்தின் கீழ் வலது மூலையில் காணலாம்

பாசிகள் (Algae), பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, ஒளிச்சேர்க்கை செய்ய வல்ல உயிரினங்கள். இவை பொதுவாக நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய தாவர வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் புரோட்டிசிட்டு மற்றும் புரோட்டோசோவா வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை பரிணாம வளர்ச்சியின் எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு செல்லிருந்து பல்லாயிரம் செல்கள் வரை காணப்படுபவையாகும்.

பாசிகளில் பச்சை பாசி, பழுப்பு பாசி, இருகளப் பாசிகள் எனப்பல வகைகள் உண்டு. இப்பாசிகள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கழிமுகங்கள் மற்றும் கடலில் வாழக்கூடியவை. நன்னீரில் வாழ்பவை உவர்நீரில் வாழா. அதே போல் உவர்நீரில் வாழ்பவை நன்னீரில் வாழாது. கழிமுகங்களில் வாழக்கூடியவை நன்னீரிலும், உவர்நீரிலும் வாழா.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்