கருவமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவமிலங்கள் அல்லது கருக்காடிகள் (Nucleic acids) எனப்படுபவை உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான டி.என்.ஏ (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் - Deoxyribonucleic acid), ஆர்.என்.ஏ (ரைபோ கரு அமிலம் - Ribonucleic acid) என்பவற்றைக் கொண்ட உயிரியல் மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து உடலியங்கியல் தேவைகளுக்குமான புரதங்களை ஆக்கத் தேவையான அமினோ அமிலங்களுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளன. இதனை 1871 இல் முதலில் அறிமுகப்படுத்தியவர் Friedrich Miescher ஆவார்.[1]