அமினோ அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Animation of two mirror image molecules rotating around a central axis.
அலனின் அமினோ அமிலத்தின் இரண்டு ஒளிச்சுழல் மாற்றியங்கள், D-அலனின் மற்றும் L-அலனின்
பினைல்அலனின் என்பது ஒரு பொது அமினோ அமிலம் ஆகும்.
ஆல்ஃபா - அமினோ அமிலத்தின் பொது கட்டமைப்பு

வேதியியலில், ஓா் அமினோ அமிலம் (amino acid) என்பது, அமைன், கார்பாக்சைல் ஆகிய இரண்டு செயற்பாட்டுக் கூட்டங்களையும் (functional group) கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும். உயிர்வேதியியலில், இச் சொல் H2NCHRCOOH என்னும் பொது வாய்பாட்டைக் கொண்ட ஒரு ‌ஆல்ஃபா-அமினோ அமிலத்தைக் குறிக்கும். இங்கே R ஒரு கரிமவேதிக் (organic) கூறு ஆகும். ஆல்ஃபா-அமினோ அமிலங்களில் அமினோ, காபொக்சைலேட்டு ஆகிய கூட்டங்கள் ஆல்ஃபா - கார்பன் (α–carbon) எனப்படும் ஒரே கரிம அணுவுடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்தப் பக்கச் சங்கிலி (R-கூட்டம்) ஆல்ஃபா-கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துப் பல்வேறு அமினோ அமிலங்கள் தங்களுக்குள் வேறுபடுகின்றன. இது, கிளைசினில் இருப்பது போல் ஒரு ஐதரசன் அணுவிலிருந்து, அலனைனில் உள்ள மெத்தைல் கூட்டம் ஊடாக, டிரிப்டோபானில் காணப்படும் வேற்று வளையக் கூட்டம் வரை பல்வேறு அளவுகளில் உள்ளது.

எல்லா உயிரினங்களிலும் காணப்படும் அமினோ அமிலங்களுக்குப் புறம்பாகப் பல இயற்கையல்லாத பல அமினோ அமிலங்களும், தொழில்நுட்பம், தொழில்துறை ஆகியவற்றில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

இன்றியமையாத அமினோ அமிலங்கள்: (Essential Amino Acids)

அமினோ அமிலங்கள் தான் புரதச் சங்கிலியின் அடிப்படை. புரதங்கள் தான் வாழ்வின் ஆதாரம். ஆனால், எல்லா அமினோ அமிலங்களையும் மனிததர்கள்/விலங்குகள் உடலால் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமாக மட்டுமே இவற்றைப் பெற முடியும். அவ்வாறு மொத்தம் 9 இன்றியமையா அமினோ அமிலங்கள் உள்ளன. அவையாவன, (நினைவுக்கு : V HILL MP TT)

அமினோ அமிலம் மூவெழுத்து ஓரெழுத்து பக்கத்தொடரி முனைமை பக்கத்தொடரி மின்னூட்டம் (pH 7.4)
அலனின் Ala A மின் முனைவற்றது நடுநிலை
ஆர்ஜினின் Arg R மின் முனைவுள்ளது நேர்மின்மம்
அஸ்பரஜின் Asn N மின் முனைவுள்ளது நடுநிலை
அஸ்பார்டிக் அமிலம் Asp D மின் முனைவுள்ளது எதிர்மின்மம்
சிஸ்டீன் Cys C மின் முனைவுள்ளது நடுநிலை
குளூட்டாமிக் காடி Glu E மின் முனைவுள்ளது எதிர்மின்மம்
குளூட்டமின் Gln Q மின் முனைவுள்ளது நடுநிலை
கிளைசின் Gly G மின் முனைவற்றது நடுநிலை
ஹிஸ்டிடின் His H மின் முனைவுள்ளது நேர்மின்மம் (10%)

நடுநிலை (90%)

ஐசோலியூசின் Ile I மின் முனைவற்றது நடுநிலை
லியூசின் Leu L மின் முனைவற்றது நடுநிலை
லைசின் Lys K மின் முனைவுள்ளது நேர்மின்மம்
மெத்தியோனின் Met M மின் முனைவற்றது நடுநிலை
பினைல்அலனின் Phe F மின் முனைவற்றது நடுநிலை
புரோலின் Pro P மின் முனைவற்றது நடுநிலை
செரின் Ser S மின் முனைவுள்ளது நடுநிலை
திரியோனின் Thr T மின் முனைவுள்ளது நடுநிலை
டிரிப்டோபான் Trp W மின் முனைவற்றது நடுநிலை
டைரோசின் Tyr Y மின் முனைவுள்ளது நடுநிலை
வாலின் Val V மின் முனைவற்றது நடுநிலை

கீழே உள்ள படத்தில் புதிய அமினோ அமிலம் செலீனோசிஸ்டீன் இணைக்கப்பட்டுள்ளது.

அமினோ அமிலங்களின் தொகுப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=அமினோ_அமிலம்&oldid=960686" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்