சூழ்நிலைமண்டலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூழ்நிலைமண்டலம் (ecosystem) என்பது, ஒரு பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இயற்கை அலகு ஆகும்.
1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy Clapham) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக சூழநிலைமண்டலம் என்பதற்குச் சரியான ecosystem என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் ஆர்தர் டான்ஸ்லே (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் சூழலியலாளர், இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் சூழலுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.
உயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே சூழ்நிலைமண்டலம் என்னும் கருத்துருவின் அடிப்படையாகும்.
சூழ்நிலைமண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழ்நிலைமண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும்.
[தொகு] எடுத்துக்காட்டுகள்
சூழ்நிலைமண்டலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: