பவளப் பாறைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Some of the biodiversity of a coral reef.
பவளப் பாறைகளை (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவை கடலினுள் வாழ்கின்றன. பெரும்பாலும் இவை வசிக்கும் பகுதி பூமத்திய ரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளிலும் பசிபிக் கடலிலும் வசிக்கின்றன. இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கும்.
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன. [1]
பசிபிக் மாக்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.