உலக பாரம்பரியக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலகப் பாரம்பரியக் குழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவிற்கான இலச்சினை

உலக பாரம்பரியக் குழு (World Heritage Committee) உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய சாசனத்தை செயற்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு அமைப்பாகும். இந்தக் குழுவே, குறிப்பிட்ட களங்கள் தொடர்பான மரபொழுங்குகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கவனித்துக் கொள்வதுடன், அது தொடர்பான நடைமுறைகளை செயற்படுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் உலக பாரம்பரிய நிதியத்தின் பயன்பாட்டை வரையறுப்பதுடன், குறிப்பிட்ட ஒரு நாடானது தனது எல்லைக்குள் உள்ள குறிப்பிட்ட பாரம்பரியக் களத்தைப் பாதுகாக்க நிதி உதவி கோரும் பட்சத்தில், அதனை உலக பாரம்பரிய நிதியத்திலிருந்து வழங்குவதற்கும் இக்குழுவே பொறுப்பாக இருக்கும். 21 நாட்டுக் குழுக்கள்[1] கொண்ட இக்குழு நாட்டுக் குழுக்களின் பொது பேரவையால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.[2]


உலக பாரம்பரிய சாசனத்தின்படி குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு தமது பணியில் இருக்கலாம் ஆயினும், பல நாடுகளும் தமது நாட்டின் குழு உறுப்பினரை நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தாமாகவே விலக்கிக் கொன்டு, ஏனைய நாடுகளுக்கு உறுப்பினராகும் சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றன.[2]. 2005 ஆம் ஆண்டு, 15 ஆவது பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, இக்குழுவிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆறு ஆண்டு பணிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர்[2].

அமர்வுகள்[தொகு]

உலகப் பாரம்பரியக் குழு, ஏற்கெனவே உள்ள பாரம்பரியக் களங்களின் மேலாண்மை குறித்தும் நாடுகளிலிருந்து பெறப்பட்ட புதியக் களங்களுக்கான பரிந்துரைகளை ஏற்பது குறித்தும் கலந்துரையாட ஆண்டுக்கொருமுறை கூடுகிறது.[2]

அமர்வு[3] ஆண்டு நாள் நடந்த நகரம் நாட்டுக் குழு
1 1977 27 சூன்–1 சூலை பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
2 1978 5 செப்டம்பர்–8 செப்டம்பர் வாஷிங்டன், டி.சி. Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
3 1979 22 அக்டோபர்–26 அக்டோபர் கெய்ரோ & லுக்சார் எகிப்தின் கொடி எகிப்து
4 1980 1 செப்டம்பர்–5 செப்டம்பர் பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
5 1981 26 அக்டோபர்–30 அக்டோபர் சிட்னி ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
6 1982 13 திசம்பர்–17 திசம்பர் பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
7 1983 5 திசம்பர்–9 திசம்பர் பிளாரென்சு இத்தாலியின் கொடி இத்தாலி
8 1984 29 அக்டோபர்–2 நவம்பர் புவெனஸ் ஐரிஸ் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா
9 1985 2 திசம்பர்–6 திசம்பர் பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
10 1986 24 நவம்பர்–28 நவம்பர் பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
11 1987 7 திசம்பர்–11 திசம்பர் பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
12 1988 5 திசம்பர்–9 திசம்பர் பிரசிலியா பிரேசிலின் கொடி பிரேசில்
13 1989 11 திசம்பர்–15 திசம்பர் பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
14 1990 7 திசம்பர்–12 திசம்பர் பான்ஃப் கனடா கொடி கனடா
15 1991 9 திசம்பர்–13 திசம்பர் கார்த்தேஜ் துனீசியாவின் கொடி துனீசியா
16 1992 7 திசம்பர்–14 திசம்பர் சான்டா ஃபே Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
17 1993 6 திசம்பர்–11 திசம்பர் கார்டஜெனா கொலம்பியாவின் கொடி கொலம்பியா
18 1994 12 திசம்பர்–17 திசம்பர் பூகெத் தாய்லாந்து கொடி தாய்லாந்து
19 1995 4 திசம்பர்–9 திசம்பர் பெர்லின் செருமனியின் கொடி செருமனி
20 1996 2 திசம்பர்–7 திசம்பர் மெரிடா மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ
21 1997 1 திசம்பர்–6 திசம்பர் நேப்பிள்சு இத்தாலியின் கொடி இத்தாலி
22 1998 30 நவம்பர்–5 திசம்பர் குயோட்டோ சப்பான் கொடி சப்பான்
23 1999 29 நவம்பர்–4 திசம்பர் மார்ரெகெச் மொரோக்கோவின் கொடி மொரோக்கோ
24 2000 27 நவம்பர்–2 திசம்பர் கெய்ர்ன்ஸ் ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
25 2001 11 திசம்பர்–16 திசம்பர் ஹெல்சிங்கி பின்லாந்தின் கொடி பின்லாந்து
26 2002 24 சூன்–29 சூன் புடாபெஸ்ட் அங்கேரியின் கொடி அங்கேரி
27 2003 30 சூன்–5 சூலை பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
28 2004 28 சூன்–7 சூலை சுசூ Flag of the People's Republic of China சீன மக்கள் குடியரசு
29 2005 10 சூலை–17 சூலை டர்பன் தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
30 2006 8 சூலை–16 சூலை வில்னியசு லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா
31 2007 23 சூன்–1 சூலை கிறைஸ்ட்சர்ச் நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
32 2008 2 சூலை-10 சூலை குயுபெக் நகரம் கனடா கொடி கனடா
33 2009 22 சூன்-30 சூன் செவைல் எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா
34 2010 25 சூலை-3 ஆகத்து பிரசிலியா பிரேசிலின் கொடி பிரேசில்
35 2011 19 சூன்-29 சூன் பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
36 2012 25 சூன்-5 சூலை சென் பீட்டர்ஸ்பேர்க் உருசியாவின் கொடி உருசியா
37 2013 17 சூன்-27 சூன் புனோம் பென் கம்போடியாவின் கொடி கம்போடியா


உறுப்பினர்கள்[தொகு]

[உரை] – [தொகு]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் குழு உறுப்பினர்கள்
உறுப்பினர்[4] சார்பாளர் குறிப்புகள்
அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா
கம்போடியாவின் கொடி கம்போடியா
கொலம்பியாவின் கொடி கொலம்பியா
எஸ்தோனியாவின் கொடி எஸ்தோனியா
எதியோப்பியாவின் கொடி எதியோப்பியா
பிரான்சின் கொடி பிரான்ஸ் உதவித்-தலைவர்
செருமனியின் கொடி செருமனி
இந்தியாவின் கொடி இந்தியா
ஈராக்கின் கொடி ஈராக்
சப்பான் கொடி சப்பான்
மலேசியா கொடி மலேசியா உதவித்-தலைவர்
மாலியின் கொடி மாலி
மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ பியாட்ரிட்சு எர்னான்டெசு நர்வேசு ஒருங்கிணைப்பாளர்/உதவி-தலைவர்
கட்டார் கொடி கத்தார்
உருசியாவின் கொடி உருசியா மித்ரோபனோவா எலெனோரா அவைத்தலைவர்
செனகல் கொடி செனகல்
செர்பியாவின் கொடி செர்பியா
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா உதவித்-தலைவர்
சுவீடன் கொடி சுவீடன்
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து
தாய்லாந்து கொடி தாய்லாந்து
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் உதவித்-தலைவர்
மொத்தம் 21

மேற்கோள்கள்[தொகு]

  1. யுனெசுக்கோ உலக பாரம்பரிய வலைத்தளத்தின்படி இந்நாடுகள் உலக பாரம்பரிய சாசனத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டவை. சனவரி 2012படி, மொத்தம் 188 நாட்டுக்குழுக்கள் உள்ளன.
  2. 2.0 2.1 2.2 2.3 "The World Heritage Committee". UNESCO World Heritage Site. பார்த்த நாள் 2006-10-14.
  3. "Sessions". UNESCO World Heritage Site.
  4. http://whc.unesco.org/en/sessions/36COM/

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உலக_பாரம்பரியக்_குழு&oldid=1544647" இருந்து மீள்விக்கப்பட்டது