ஹெல்சின்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெல்சிங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹெல்சின்கி நகரம்
Location of ஹெல்சின்கி நகரம்
நாடு பின்லாந்து
மாநிலம் தெற்கு பின்லாந்து
மக்கள் (2007)
 • மொத்தம் 564

ஹெல்சின்கி (Helsinki), பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்தொகை சுமார் 564,908 ஆகும் (31 ஜனவரி 2007 இன் படி)[1]. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.

ஹெல்சின்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான யெஸ்ப்பூ, வன்டா மற்றும் கௌன்னியெனென் ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி தலைநகர்ப் பகுதி ஆகும்.

அறிமுகம்[தொகு]

ஹெல்சின்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சின்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் ரஷ்யா, எஸ்தோனியா, சுவீடன், சோமாலியா, செர்பியா, சீனா, ஈராக் மற்றும் ஜெர்மனி முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.


ஹெல்சின்கி, பின்லாந்தின் வணிக மற்றும் கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் பொருட்காட்சியகங்கள் இங்கு அமைந்துள்ளது. நோர்டிக் நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சின்கின் சனோமட்" (Helsingin Sanomat) இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.

வரலாறு[தொகு]

1820-ல் ஹெல்சின்கி நகரம்
 1. 1550-ல் ஹெல்சின்கி நகரம் குஸ்டவ் வாசா (Gustav Vasa) என்ற சுவீடிஷ் மன்னரால் நிறுவப்பட்டது.
 2. 1640-ல் ஹெல்சின்கி நகரம் வண்டா நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
 3. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷிய படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் சுவீடிஷ் ராணுவம் ஸ்வெபொர்க் (Sveaborg)(சௌமென்லின்னா) என்ற கடற்க்கரைக் கோட்டையை கட்டியது.
 4. 1809-ல் பின்லாந்தின் ஆட்சி சுவீடனிடமிருந்து ரஷியாவுக்கு கைமாறியதும், பின்னர் ரஷிய அரசாங்கம் பின்லாந்தின் தலைநகரை ஆபொ(Åbo) (டுர்க்கு-Turku) விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
 5. 19-ஆம் நூற்றாண்டில் ஹெல்சின்கி, பின்லாந்தின் வணிக மற்றும் கலை பண்பாட்டு மையமாகியது.

அரசியல்[தொகு]

ஹெல்சின்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.

கல்வி[தொகு]

ஹெல்சின்கி பல்கலைக் கழகம்
 • ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
 • உயர் பள்ளிகளின் எண்ணிக்கை: 41
 • தொழிற்கல்வி நிலையங்களின் எண்ணிக்கை: 15
 • பட்டையக் கல்லூரிகளின் எண்ணிக்கை: 4
 • பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை: 8

பல்கலைக்கழகங்கள்[தொகு]

 1. ஹெல்சின்கி பல்கலைக்கழகம் (Helsinki University)
 2. ஹெல்சின்கி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், யெஸ்ப்பூ (Helsinki University of Technology, Espoo)
 3. ஹெல்சின்கி பொருளாதாரப் பள்ளி (Helsinki School of Economics)
 4. சுவீடிஷ் பொருளாதார மற்றும் வர்த்தக மேளாண்மைப் பள்ளி (Swedish School of Economics and Business Administration)

விழாக்கள்[தொகு]

 • வப்பு - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிளாலர்களுக்கான் விழா.

புகைப்படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. பின்லாந்தின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு மையம் 31.1 2007 - ஃபின்னிஷ் (suomi) மொழியில்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹெல்சின்கி&oldid=1346967" இருந்து மீள்விக்கப்பட்டது