மடோ குரோசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மடோ குரோசோ மாநிலம்
-ன் சின்னம்
கொடி
Coat of arms of
Coat of arms
பிரேசிலில் மடோ குரோசோவின் அமைவிடம்
பிரேசிலில் மடோ குரோசோவின் அமைவிடம்
அமைவு: 15°34′S 56°04′W / 15.567°S 56.067°W / -15.567; -56.067
நாடு  Brazil
தலைநகரும் பெரிய நகரும் குய்யாபா
அரசு
 - ஆளுநர் சில்வால் டா குன்ஹா பர்போசா
பரப்பளவு
 - மாநிலம் 9,03,357 கிமீ²  (3,48,788.1 ச. மைல்)
மக்கள் தொகை (2012)[1]
 - மாநிலம் 3
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
அஞ்சல் குறியீடு 78000-000 to 78890-000

மடோ குரோசோ (Mato Grosso,போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈmatu ˈɡɾosu] – பொருள். "அடர்த்தியான புதர்கள்") பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும்.நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது.[2]

இதனைச் சூழ்ந்துள்ள மாநிலங்களாக, (மேற்கிலிருந்து வலஞ்சுழியாக) ரோன்டோனியா, அமேசோனாசு, பாரா, தோகான்ச்சீசு, கோயாசு மற்றும் மடோ குரோசோ டொ சுல். தென்மேற்கு எல்லையில் பொலிவியா நாடுள்ளது. சமவெளிப் பிரதேசமான இந்த மாநிலத்தில் அமேசான் மழைக்காடுகள், செர்ராது புன்னிலங்கள், பந்தனால் சதுப்புக் காடுகள் அமைந்துள்ளன. மாநிலத்தின் 40% பரப்பளவு திறந்தவெளித் தாவரங்களால் நிறைந்துள்ளன. இங்குள்ள சப்படா டோசு குய்மரேசு தேசியப் பூங்காவில் பல குகைகளும் அருவிகளும் நடைத்தளங்களும் உள்ளதால் அது பெரும் சுற்றுலா மையமாக உள்ளது. வடக்கில் அமேசான் காடுகள் அமைந்துள்ளன; மாநிலத்தின் பாதிக்கும் மேலே உயிரியற் பல்வகைமையால் நிறைந்துள்ளது. சிங்கு தேசியப் பூங்காவும் அராகுயா ஆறும் இங்குள்ளன. தெற்கிலுள்ள பந்தனால் உலகின் மிகப் பெரும் தண்ணீர்நிலமாக உள்ளது. இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் நீர்வாழ் பறவை இனங்களின் வாழ்விடமாக உள்ளது.

காட்சிக்கூடம்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. [1]
  2. குறிப்பு: மற்றொரு வரிவடிவமாக "மட்டோ குரோசோ" எனப்படுகிறது. மட்டோ குரோசோ நகரம் முன்பு வில்லா பெல்லா" என அழைக்கப்பட்டு வந்தது. மூலம்: Exploration of the Valley of the Amazon, vol.2, by Lieut. USN. Lardner Gibbon 1853; chapter 11. p. 275)

வெளி இணைப்புகள்[தொகு]

மடோ குரோசோ பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


"http://ta.wikipedia.org/w/index.php?title=மடோ_குரோசோ&oldid=1625168" இருந்து மீள்விக்கப்பட்டது